• Wed. Apr 23rd, 2025

சிறு விவசாயிகளுக்கு  நலத்திட்டம் வழங்கும் விழா..,

ByG. Anbalagan

Mar 28, 2025

நீலகிரி மாவட்டம் குன்னூர் உபாசி அரங்கில் சிறு விவசாயிகளுக்கு  நலத்திட்டம் வழங்கும் விழா நடைப்பெற்றது. விழாவில்  தேயிலை விவசாயிகளின் முக்கிய கோரிக்கையான பச்சை தேயிலைக்கு 35 ரூபாய் வழங்குவது  குறித்தும் மற்றப் பயிர்களோடு தேயிலையை சேர்பது குறித்தும் பேச்சுவார்த்தை  நடைப்பெற்று  வருகிறது.

தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்விஉதவி தொகை1030 மாணவ மாணவியருக்கு 1 கோடியே 60 லட்சம்  வழங்கப்பட்டுள்ளதாகவும் தேயிலை விவசாயிகளுக்கு விவசாயிகள் உற்பத்தி  நலச்சங்கம்  மூலம் 30 கோடி மதிப்பில் தேவையான வாகனம் கவாத்து செய்யும் மிசின்  மினி தேயிலை தொழிற்சாலை  அமைக்க மாணியம் போன்ற சலுகைகள்  வழங்கப்பட்டுள்ளதாகவும் தரமான பச்சை தேயிலையை விவசாயிகள் வழங்க வேண்டும்.

இந்த ஆண்டு 254 மில்லியன் கிலோ  தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கென்யா, சைனா,இலங்கை ஆகிய நாடுகள் தேயிலை ஏற்றுமதியில் முதல் மூன்று இடங்களில் இருந்தன தற்போது  இலங்கையை பின்னுக்கு தள்ளி இந்தியா மூண்றாம் இடம் பிடித்துள்ளது என தெரிவித்தார்.