• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மனைவியின் தாலி செயின் உள்ளிட்ட நகைகள் பறிப்பு..,

BySeenu

Jul 6, 2025

Q பிராஞ்ச் ஆய்வாளராக பணியாற்றும் அதிகாரியின் வாகன ஓட்டுநராக உள்ள தலைமை காவலர் பார்த்திபன். இவர் நேற்று நள்ளிரவு தனது மனைவியுடன் உணவு அருந்த உணவகம் ஒன்றிற்கு செல்ல கொச்சின் புறவழிச் சாலையில் சென்று கொண்டு இருந்தார். அப்பொழுது அடையாளம் தெரியாத மூன்று நபர்கள், திடீரென அவர்களை தாக்கி, பார்த்திபனை தலை பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் வெட்டி காயப்படுத்தி உள்ளனர்.

தாக்கியவர்கள், பார்த்திபனின் மனைவியிடம் இருந்த தாலி செயின், மோதிரம் மற்றும் பிரேஸ்லெட் ஆகியவை பறித்துக் கொண்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது.
காயம் அடைந்த பார்த்திபன் முதலில் அரசு மருத்துவமனைக்கு சென்று முதல் உதவி சிகிச்சை எடுத்து, பின்னர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று உள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சூலூர் காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையில் காவலர் மற்றும் மனைவியை தாக்கி நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.