• Sat. Nov 15th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

வில்லங்கமான கேள்வி! தீபிகாவின் பதில்!

பாலிவுட் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோனே. இவர் தமிழ் சினிமாவில் சென்னை எக்ஸ்பிரஸ் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். மேலும் ரஜினிக்கு ஜோடியாக கோச்சடையான் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது கெஹ்ரையன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இன்று அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. மேலும் இதில் நடிகை தீபிகா படுக்கையறை மற்றும் ஹீரோவுடன் நெருக்கமான முத்தக்காட்சிகளில் நடித்துள்ளது, பலவிதமான விமர்சனங்களையும் கிளப்பியுள்ளது!

இந்நிலையில் இப்படத்தின் பிரமோஷனின் போது இந்த மாதிரி ஆபாசமான லிப்லாக் முத்தக் காட்சியில் நடிக்க உங்கள் கணவரிடம் அனுமதி வாங்கினீர்களா? என கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர், இதுமாதிரியான முட்டாள்தனமான கருத்துக்களை நானோ ரன்வீரோ கண்டுகொள்வதில்லை. பொருட்படுத்துவதுமில்லை. எனது நடிப்பை கண்டு ரன்வீர் ரசிப்பார். அதேபோல இந்த நடிப்பையும் ரசிப்பார். பெருமைபடுவார் என கூறியுள்ளார்.