• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

இருக்கை மீது நடந்து சென்றது ஏன்? – திருமாவளவன்

Byமதி

Dec 1, 2021

இருக்கை மீது நடந்து சென்றது ஏன் என்பது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.

மழை நீரில் நனையாமல் இருக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை, தொண்டர்கள் இருக்கைகள் மீது ஏற்றி காருக்குள் அனுப்பிய நிகழ்வு சர்ச்சையானது. நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக திருமாவளவன் சென்னை வேளச்சேரி வீட்டில் இருந்து டெல்லி புறப்பட தயாரானார்.

ஆனால் வீட்டை மழை நீர் சூழ்ந்திருந்ததால் பார்வையாளர்கள் அமரும் இருக்கைகள் மீது அவர் நின்றபடி ஆதரவாளர்கள் நாற்காலியை இழுப்பது, அக்கட்சியின் இணையதள பிரிவு வெளியிட்டுள்ள வீடியோவில் உள்ளது. பின்னர் தண்ணீரில் நனையாதப்படி ஒவ்வொரு இருக்கையாக தாண்டிச்சென்று தயாராக இருந்த காரில் திருமாவளவன் ஏறியுள்ளார். இந்த வீடியோ விமர்சனத்திற்கும், விவாதத்திற்கும் உள்ளாகியது.

இது தொடர்பாக விளக்கமளித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன், டெல்லியில் நடைபெறும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கலந்துகொள்ள ஏர்போர்ட் போகும்போது ஷூ நனைந்து, கால் நனைந்து, ஷாக்ஸ் நனைந்து விமானத்தில் 3 மணி நேரம் அமரமுடியாதல்லவா? சேறு அறியாத, சகதியை சந்திக்காத காலில்லை என்னுடையது.

மழை வெள்ளத்தில் சென்னையின் எல்லா இடங்களிலும் இறங்கி, சேறு, சகதிகளை அள்ளியிருக்கிறோம். மக்களோடு மக்களாக நின்று பணியாற்றி இருக்கிறோம். அது என்னுடைய வீட்டுக்கு அருகிலிருக்கும் தண்ணீர். மக்களை பார்க்கப்போகும்போது நான் அப்படி செய்யவில்லை. அது சாக்கடைக் கலந்த தண்ணீர். அவசரமாக புறப்பட்டபோது, நான் கீழே விழாமலிருக்க தொண்டர்கள் என்னை பிடித்துக்கொண்டனர். தோழர்களை குறைத்து நடத்தும் போக்கு என்பது என்னுடைய இயல்பு கிடையாது” என்று விளக்கம் அளித்துள்ளார்.