• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

எங்கள் தெருவுக்கு குடிதண்ணீர் லாரி ஏன் வரவில்லை?

ByVasanth Siddharthan

May 6, 2025

தமிழகம் முழுவதும் நேற்று முன் தினம் முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பம் ஆகிவிட்டது. இதனால் ஆங்காங்கே பொதுமக்கள் தண்ணீர் தேவைகளுக்காக பரிதவித்து வருகின்றனர்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான லாரியில் குடிதண்ணீர் நிரப்பி தெருத்தெருவாக கொண்டு சென்று விற்பனை செய்து வருவார்கள். கடந்த சில நாட்களாக மாரியம்மன் கோவில் தெரு, பஜார் தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு லாரி வருவதில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பஜார் தெரு பகுதியைச் சேர்ந்த தையல் தொழிலாளியான வெள்ளைச்சாமி (38) என்ற இளைஞர் நத்தம் அவுட்டர் அருகே தண்ணீர் லாரி வந்து கொண்டிருந்தபோது எங்கள் தெருவுக்கு ஏன் தண்ணீர் லாரி வரவில்லை எனக்கூறி அங்கிருந்து லாரியை நகர விடாமல் லாரிக்கு முன்னால் படுத்துக்கொண்டார்.

தகவல் அறிந்து அங்கு வந்த நத்தம் போலீசார் அந்த இளைஞரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கூறிய இளைஞர் பல வருடமாக இவர்களிடம் தான் குடிப்பதற்கு தண்ணீர் வாங்குகிறோம். தற்போது அங்கு வரவில்லை என்றால் நாங்கள் என்ன செய்வது என கூறினார். இனி தொடர்ந்து உங்கள் தெரு பகுதிக்கு லாரி வரும் என நத்தம் போலீசார் உறுதி அளித்தனர். பின்னர் இளைஞரை காவல் நிலையம் அழைத்துச் சென்று இதுபோன்ற செயலில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து அனுப்பினர்.

எங்கள் தெருவுக்கு குடிதண்ணீர் லாரி ஏன் வரவில்லை எனக் கூறி லாரி முன் படுத்த இளைஞரின் அட்ராசிட்டியால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.