2022-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் 20 பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
“பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் வழங்கப்படும்; கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, ரவை, கோதுமை, உப்பு” என 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெறாததால் விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கரும்பும் பொங்கல் தொகுப்பில் இடம்பெற முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளதாக, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருக்கிறார். 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு துணிப்பையுடன் முழுக்கரும்பும் இடம்பெறும் என அவர் அறிவித்திருக்கிறார்.