• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

எல்.ஐ.சி.,யில் உள்ள ரூ..21500 கோடி ரூபாய் பணம் யாருடையது ?

எல்ஐசி வசம் வாடிக்கையாளர்களின் உரிமை கோரப்படாத பணம் 21,500 கோடி ரூபாய் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் 5% பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன. இந்நிலையில் பங்கு விற்பனை நடைமுறை தொடர்பான விரிவான அறிக்கையை பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி வசம் எல்ஐசி வழங்கியுள்ளது. இதில் தங்கள் வசம் வாடிக்கையாளர்களுக்கு சொந்தமான ஆனால் முதிர்வுக்காலம் முடிந்த பிறகும் நெடுங்காலமாக உரிமை கோராத 21 ஆயிரத்து 500 கோடி ரூபாய் பணம் உள்ளதாக எல்ஐசி தெரிவித்துள்ளது.

2019ஆம் ஆண்டு 13 ஆயிரத்து 843 கோடி ரூபாயாக இருந்த உரிமை கோரப்படாத தொகையின் மதிப்பு கடந்த செப்டம்பரில் வட்டியுடன் சேர்த்து 21 ஆயிரத்து 500 கோடியாக அதிகரித்துள்ளதாகவும் எல்ஐசி தெரிவித்துள்ளது. காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் வசம் உள்ள ஆயிரம் ரூபாய்க்கு மேலான உரிமை கோரப்படாத தொகை மற்றும் அதற்குரியவர்களின் விவரங்களை தத்தமது இணையதளங்களில் அனைவரும் பார்க்கும் வகையில் பதிந்து வைத்திருக்கவேண்டும் என்பது விதியாகும்.

காப்பீட்டு முதிர்வுக்காலத்தை தொடர்ந்து 10 ஆண்டுகளுக்குள் அத்தொகையை உரியவர்கள் திரும்பப் பெறாவிட்டால் அது மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள மூத்த குடிமக்கள் நல நிதியத்திற்கு தானாகவே மாற்றப்பட்டுவிடும்.