• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

2026க்கு பிறகு யார் ஐசிஐ விற்கு செல்கிறார் என தெரியும்..,

ByKalamegam Viswanathan

Sep 11, 2025

இன்றைய தினம் பரமக்குடியில் மதிப்பிற்குரிய இம்மானுவேல் சேகரன் குரு பூஜையில் கலந்து கொள்வதற்காக வந்திருக்கிறோம். பாஜக என்றைக்குமே மறைந்த தியாகிகளையும் பெரியவர்களையும் வணங்கவும், போற்றவும் எங்களுடைய கடமைகளை செய்து இருக்கிறோம். அந்த வகையில் இன்று மரியாதை செய்வதற்காக வந்திருக்கிறோம்.

அதிமுக பாஜகவை உடைத்து விட்டதாக உதயநிதி விமர்சனம் குறித்த கேள்விக்கு:

அதிமுக வலுவாக தான் உள்ளது. அண்ணன எடப்பாடி பழனிச்சாமி போன்ற இடமெல்லாம் ஆரவாரம் கொடுக்கிறார்கள், ஆதரவு கொடுக்கிறார்கள் அவர்கள் பொறாமையிலேயே சொல்கிறார்கள். அவர்கள் எண்ணத்தை சொல்கிறார்கள். அதிமுகவை பாஜக உடைக்க வேண்டிய அவசியம் கிடையாது. நாங்கள் தான் இன்றைக்கு அவர்களை தலைவராக ஏற்று இருக்கிறோம்.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையனை மத்திய அமைச்சரை சந்தித்தது குறித்த கேள்விக்கு:

சந்திப்பதற்கு துணிச்சல் தேவை இல்லை. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் உள்துறை அமைச்சரை சந்தித்ததாக சொல்லி இருக்கிறார். எனக்கு முழுமையான கருத்து தெரியாது.

பாஜக ஐசியூவில் உள்ளதாக உதயநிதி சொல்லி இருக்கிறார்:

2026க்கு பிறகு யார் ஐசிஐ விற்கு செல்கிறார் என தெரியும்.

ஓபிஎஸ் கூட்டணிக்கு எந்த நிபந்தனையும் தெரிவிக்கவில்லை ஆனால் டிடிவி இபிஎஸ்ஐ முதல்வர் வேட்பாளர் ஆக கூடாது என சொல்வது குறித்த கேள்விக்கு:

அது அவர் சொந்த கருத்து. ஓபிஎஸ் இடம் எந்த நேரமும் அழைத்துப் பேசுவேன் யார் மீதும் எனக்கு கருத்து வேறுபாடு கிடையாது. அண்ணன் ஓபிஎஸ் இடம் கண்டிப்பாக பேசுவேன் பேசிவிட்டு சொல்கிறேன்.

செங்கோட்டையனை அமைச்சர்கள் சந்தித்ததால் கூட்டணிக்குள் இடர்பாடு உள்ளதா என்ற கேள்விக்கு:

அதனால் எங்கள் கூட்டணிக்குள் எந்த வித இடர்பாடும் இல்லை. உள்துறை அமைச்சர் இங்கு வந்து சந்தித்தால் தான் அப்படி பேச வேண்டும் இவர் போய் அங்கு சந்தித்திருக்கிறார்.

பள்ளிக்கு விடுமுறை விட்டு உங்களுடன் முதல்வர் முகாம் நடந்தது குறித்து கேள்விக்கு:

அது மிகப்பெரிய கண்டிக்கத்தக்க செயல். கல்வி அறிவு கொடுக்க வேண்டும் என நினைப்பார்கள். இவர்கள் அந்த பள்ளிக்கூடத்திற்கு விடுமுறை விட்டு விழா எடுத்திருக்கிறார்கள். விளம்பரமும் செய்து இருக்கிறார்கள். அதனால் தான் இந்த ஆட்சி வேண்டாம் என்று நினைக்கிறோம்.

திமுக வலுவாக இருப்பதாக அண்ணாமலை கருத்து குறித்த கேள்விக்கு:

திமுக வலுவாக இருக்கிறது என உதயநிதி சொல்வதாக சொல்லி இருக்கிறார். அண்ணாமலை திமுக வலுவாக இருப்பதால் சொல்லவில்லை.

விஜய் சனிக்கிழமை பிரசாரம் செய்வது குறித்த கேள்விக்கு:

சனிக்கிழமை குறித்து உங்களுக்கு தெரியும். அதன் பிறகு நான் எதுவும் சொல்ல வேண்டாம்.

நீங்கள் பதவி விலக இருப்பதாக வந்த தகவல் குறித்த கேள்விக்கு:

எனக்கு பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை. அதே நேரத்தில் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் மற்றும் நட்டா ஜி என் மீது அளவற்ற அன்பும், பாசம் வைத்திருக்கிறார்கள். கங்கைகொண்ட சோழபுரத்தில் பேசும் போது கூட நயினார் நாகேந்திரன் மீது பாசம் வைத்திருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். உள்துறை அமைச்சர் என் வீட்டிற்கு வந்து நலம் விசாரித்து இருக்கிறார். இப்படி இருக்கும்போது நான் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை. ஊடகங்களும் பத்திரிக்கையாளர்களும் பத்திரிகை தர்மத்தை காப்பாற்ற வேண்டும் தனியார் நாளிதழுக்கு என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு வேறு ஏதாவது தொழில் செய்யலாம். இப்படி எழுவதற்கு பதிலாக குடும்ப ரீதியாக அவர்கள் ஏதாவது தொழில் செய்யலாம் இதற்கு மீது காட்டமாக எனக்கு பேச தெரியாது. நானும் இது போன்று தேவையில்லாத விமர்சனம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கூட்டணி கட்சி பிளவு குறித்து டெல்லி தலைமை குறித்த கேள்விக்கு:

அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் என்ன கொள்கிறாரோ அதுதான். அங்கு பிளவு என்பது கிடையாது.

கூட்டணி குறித்து டிடிவி டிமாண்ட் குறித்த கேள்விக்கு:

அண்ணன் ஓபிஎஸ் எந்த நேரத்திலும் பேசுவேன் என்று சொல்லியிருக்கிறார் இப்போது வேண்டாம் நான் பேசுவேன். யாரும் பிளவு படுத்த நினைக்க வேண்டாம். தேர்தலுக்கு இன்னும் 8 மாதம் உள்ளது எப்போது பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறினார்.