• Fri. Apr 26th, 2024

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரை தேர்ந்தெடுத்த 133 பேர் யார்!?

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் 30 /4 /2023 அன்று ஞாயிற்றுக்கிழமை சென்னை அடையாரில் உள்ள ஜானகி ராமசந்திரன் கல்லூரியில் நடைபெற்றது. இந்த தேர்தலில்
1111 பேர் வாக்களித்தனர்.
இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு முரளி ராமசாமி மற்றும் மன்னன் இருவரும் போட்டியிட்டனர்.
இந்த முறை இரண்டு அணிக்கும் இடையே கடும் போட்டியாக இருந்தது.
தயாரிப்பாளர்கள்நலன் காக்கும் அணியின் சார்பாக தலைவர் பதவிக்கு போட்டியிட்ட முரளி ராமசாமி 615 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தயாரிப்பாளர்கள்உரிமை காக்கும் அணியின் சார்பாக தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மன்னன் 482வாக்குகள் பெற்றுள்ளார்.133 வாக்குகள் அதிகமாக பெற்ற முரளி ராமசாமி வெற்றி பெற்று மீண்டும் இரண்டாவது முறையாக தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.இந்தத் தேர்தலில் இரண்டு அணியும் கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைத்து ஒரு சட்டமன்ற இடைத் தேர்தலுக்கு இணையாக
இந்த தேர்தலில் ஒரு வாக்காளருக்கு குறைந்தது இரண்டு அணியினரும் ஐம்பதாயிரம் வரை கொடுத்துள்ளதாக தகவல். எத்தனை கோடி கொடுத்தாலும் தயாரிப்பாளர் சங்கத்தில் இருக்கும் 150 தயாரிப்பாளர்கள் தான் தங்கள் சங்கத்தின் தலைவரை நிர்ணயித்து தேர்ந்தெடுத்து வந்துள்ளனர். அந்த 150 தயாரிப்பாளர்கள் யாரிடமும் எந்த எதிர்பார்ப்பையும் நம்பி இல்லாத தயாரிப்பாளர்கள்.
தற்போது நடந்த தேர்தலிலும் பணம் வாங்கிகொண்டு வாக்களிக்காத வாக்காளர்கள்தான் தேர்தல் முடிவை தீர்மானித்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *