• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கள்ளக்குறிச்சி வன்முறையின் பின்னணியில் இருப்பவர்கள் யார்?

ByA.Tamilselvan

Jul 18, 2022

கள்ளக்குறிச்சி வன்முறையின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என ஐகோர்ட் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளியில் பிளஸ்2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு நேற்று நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. பள்ளியை அடித்து நொறுக்கிய போராட்டக்காரர்கள், அங்கிருந்த பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களுக்கு தீ வைத்தனர். பள்ளியின் அனைத்து ஆவணங்களும் தீக்கிரையாகின. இது தொடர்பாக 329 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கடையே உயிரிழந்த மாணவியின் உடலை மறுபிரேத பரிசேதனை செய்யக்கோரி அவரது தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மாணவியின் பிரேத பரிசோதனை தகுதியில்லாத மருத்துவர்களால் செய்யப்பட்டுள்ளது, எனவே மறுபிரேத பரிசோதனைக்கு உத்தரவிட வேண்டும் என ராமலிங்கம் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, தகுதியில்லாத மருத்துவர்கள் என எப்படி சொல்லலாம்? நீங்கள் நிபுணரா? என கேள்வி எழுப்பினர். மேலும் நிதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். நீதிபதி கூறியதாவது:- சட்டத்தை யாரும் கையில் எடுக்க முடியாது. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டது ஏன்? போராட்டம் நடத்த அனுமதித்தது யார்? மாணவியின் இறப்புக்கு என்ன காரணம்? இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இது திடீர் கோபத்தில் வெடித்த வன்முறையல்ல: திட்டமிட்டு நடத்தப்பட்டது போல் தெரிகிறது. வன்முறையின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை சிறப்புப் படை அமைத்து கண்டுபிடிக்க வேண்டும். வன்முறை சம்பவம் தொடர்பான விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்கும். இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்.