சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை அருகே கௌரிப்பட்டி கிராமத்தில் சுமார் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் குடிதண்ணீர் தேவைக்கு அருகில் உள்ள நல்ல தண்ணிர் குளத்தில் தண்ணீர் சேகரித்து அருந்துவது வழக்கம். ஆனால் குளத்தை சுற்றி முள்கம்பி வேலி அமைக்காததால் கால்நடைகள் தண்ணீரை அசுத்தப்படுத்துகின்றன. இதனால் அந்த தண்ணீரை அருந்துவதால் சுகாதார கேடு ஏற்படுவதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இக்கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம் சுமார் ரூ.8 லட்சம் செலவில் ஊராட்சி மன்ற அலுவலகம் வளாகத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்க உத்தரவிட்டது. ஆனால் ஒப்பந்ததாரர் பணியை முழுமையாக முடித்துக் கொடுக்காமல் விட்டுச் சென்றதால் சுத்தியிருப்பு நிலையம் காட்சிப் பொருளாக சிதலமடைந்து வருகிறது. இதனால் தண்ணீருக்காக அலையும் கௌரிப்பட்டி கிராம மக்கள் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து இரண்டு ஆண்டுகளாக செயல்படாமல் இருக்கும் சுத்திகரிப்பு நிலையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வேண்டுகோள் கொடுத்துள்ளனர்.