தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16 – 18 ஆம் தேதிக்குள் தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16-18 தேதிக்குள் தொடங்க வாய்ப்பு உள்ளது. இந்த மழை பொதுவாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அதிகமாக பெய்யலாம்.
தென்மேற்கு பருவமழை 16-18 அக்டோபர் 2025க்குள் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து விலகும் முன்னேற்பாடுகள் உள்ளன.
இதன் மூலம், வளிமண்டலத்தில் கிழக்கு மற்றும் வடகிழக்கு திசை காற்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வீச ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 16-18 அக்டோபர் 2025 தேதிக்குள் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எப்போது?
