• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

திமுகவின் இரட்டை வேடம் வெளிச்சம் ஆகிவிட்டது என எடப்பாடி பழனிச்சாமி கூறியதில் என்ன தவறு இருக்கிறது – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேட்டி…

ByP.Thangapandi

Aug 20, 2024

இரட்டை வேடம், கள்ள உறவு வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது என்ற பதற்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி மீது தனிநபர் விமர்சனம், தாக்குதல் தொடுத்திருக்கிறார்கள், என உசிலம்பட்டியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேட்டியளித்துள்ளார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அத்திபட்டியில் அதிமுக உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழாவில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கலந்து கொண்டு தொண்டர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்.,

தமிழ்நாட்டின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை தரம் தாழ்ந்து பேசியுள்ளது வன்மையாக கண்டிக்கதக்கது. முதலமைச்சர் என்ற பதவிக்கு நாகரீகம் இல்லாமல், அரசியல் பண்பாடு இல்லாமல் பேசி இருக்கிறார்.

திமுகவின் இரட்டை வேடத்தை கருணாநிதியின் நாணய வெளியீட்டு விழாவில் வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர்களை அழைத்திருக்கலாம் என எடப்பாடி பழனிச்சாமி கூறியதில் என்ன தவறு இருக்கிறது.

ஆளுநரின் தேனீர் விருந்தில் திமுக கலந்து கொள்ளாது என தெரிவித்ததால் திமுகவின் தோழமை கட்சிகள் உங்களை நம்பி நாங்களும் செல்ல மாட்டோம் என அறிவித்தார்கள். ஆனால் அரசு சார்பில் கலந்து கொள்கிறோம் என ஒரு முதலமைச்சரே கலந்து கொண்டுள்ளார். ஏன் இந்த தடுமாற்றம்.

இதன் மர்மம் என்ன, இதன் ரகசியம் என்ன உங்கள் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள வாழ்நாள் அடிமை என்ற சாசன ஒப்பந்ததை எழுதிக் கொடுத்துவிட்டீர்களா என தமிழ்நாட்டு மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

தமிழ் வாழ்க இந்தி ஒழிக என தனது வாழ்நாள் எல்லாம் வாழ்ந்து மறைந்த மூத்த முப்பெரும் தலைவர் கலைஞர் கருணாநிதி திருஉருவம் பொறித்த நாணயத்தில் இந்தி எழுத்து இருக்கிறதே அது முதலமைச்சரின் கவனத்திற்கு தெரியுமா என எடப்பாடி பழனிச்சாமி கேட்ட கேள்வி தேச விரோத குற்றமல்ல.

இரட்டை வேடம், கள்ள உறவு வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது என்ற பதற்றத்தில் இந்த உண்மையை உரக்க சொல்லும் எடப்பாடி பழனிச்சாமி மீது தனிநபர் விமர்சனம் தாக்குதல் தொடுத்திருக்கிறார்கள்.

இதில் எம்ஜிஆர்-ன் புகழை சுறுக்கியுள்ளார்கள் என ஒரு அபாண்டமான பொய்யை அண்ணாமலை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி முதலவராக இருந்த போது கோடிக்கணக்கான நிதியை திட்டங்களை வழங்கி அன்று 32 வருவாய் மாவட்டங்களிலும் எம்ஜிஆர்-ன் நூற்றாண்டு விழாவை நடத்தி காட்டியவர். எம்ஜிஆர்-ன் புகழை எப்படி நிலைநிறுத்த வேண்டும் என அண்ணாமலை எங்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டிய நிலையில் அதிமுகவின் பொதுச்செயலாளரும் இல்லை, தொண்டனும் இல்லை.

எம்ஜிஆர்-ன் நினைவிடத்தை வெள்ளை மாளிகைக்கு இணையாக புதுப்பித்து தந்தது, மெரினா சாலையில் தோரண வாயில் அமைத்தது, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெயர் சூட்ட மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து பெயரை சூட்டியுள்ளார். மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தை எம்ஜிஆர் பேருந்து நிலையம் என மாற்றி அவரது புகழை உலகறிய செய்திருக்கிறார்.

அம்மாவிற்கு ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என முதல்வர் ஸ்டாலின் தெரிவிக்கிறார். அவரது நினைவிடத்தில் நினைவு மண்டபம் அமைக்கும் போது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். உங்களை போல நாங்கள் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தால் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் போயிருக்கும், ஆனால் நாங்கள் அரசியல் நாகரீகத்தை கடந்து செய்யவில்லை. ஆனால் அரசியல் கால்புணர்ச்சியோடு பொய் வழக்கு போட்டு அம்மாவின் உயிரை பரித்தது நீங்கள் தான் என பகீரங்கமாக குற்றம் சாட்டுகிறேன். இன்று சாத்தான் வேதம் ஓதுவது போல அம்மாவிற்கு இரங்கல் தெரிவிக்கவில்லை என குழப்பத்தை ஏற்படுத்த பார்க்கிறீர்கள். இந்த கட்டுக்கதைகள் தமிழ்நாட்டு மக்களிடத்தில் எடுபடாது, உங்கள் இரட்டை வேடம் வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது.

வரலாறை தெரியாதவர்கள், தெரிந்தும் தெரியாமல் இருப்பது போல, இன்று பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு விட்டது போல உங்களது நையாண்டி, நககல் பேச்சு உள்ளது. அதை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என வன்மையாக கண்டிக்கிறோம் என பேட்டியளித்தார்.