• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

என்னது அரசுக்கு எதிரா மதுபானம் விற்பனையா?

ByT.Vasanthkumar

Apr 24, 2025
பெரம்பலூர் அருகே எளம்பலூர் ஊராட்சியை சேர்ந்த எம்.ஜி.ஆர் நகரில் சட்டத்திற்கு புறம்பாக டாஸ்மாக் மதுபானம் சந்து கடையில், அதே கிராமத்தை சேர்ந்த காமராஜ் என்பவர் விற்பனை செய்து வருகிறார். இதன் காரணமாக அனைத்து நேரங்களிலும் அரசு மதுபானம் கிடைப்பதால் அப்பகுதி மக்களின் குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றது என தெரிவித்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் எம்ஜிஆர் நகர் பகுதி மக்கள் புகார் அளித்தனர்.

இந்நிலையில் பெரம்பலூர் போலீசார் சட்டத்திற்கு புறம்பாக மதுபானம் விற்பனை செய்யும் காமராஜரை கைது செய்யாமல், புகார் அளித்தவர்களை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதைக் கண்டு அதிர்ச்சடைந்த எம்.ஜி.ஆர் நகர் பகுதி மக்கள் பெரம்பலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் பெரியசாமி தலைமையில் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, காமராஜரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பி. ரமேஷ் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரங்கநாதன் உட்பட 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.