• Wed. Mar 19th, 2025

எதற்கும் துணிந்தவன் டிரைலர் சொல்வது என்ன?

வலைத்தளத்தில் வெளியான ஜெய்பீம் படத்தின் வெற்றிக்குப்பிறகு நடிகர் சூர்யா, பாண்டிராஜ் இயக்கத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். நாயகியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். இமான் இசையமைத்திருக்கிறார். சத்யராஜ், வினய், சரண்யா பொன்வண்ணன், சூரி, புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ வரும் மார்ச் 10 ஆம் தேதி நேரடியாக தியேட்டர்களில் வெளியாகவுள்ள நிலையில், தற்போது ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
உடல் மெலிந்து ட்ரெய்லர் முழுக்கவே வேஷ்டி சட்டையில் வருகிறார் சூர்யா. இயக்குநர் பாண்டிராஜின் பெரும்பாலான படங்கள் குடும்பம்,  விவசாயம் சார்ந்து சமூகத்திற்கான படமாகத்தான் இருந்திருக்கின்றன. அந்த வரிசையில் ’எதற்கும் துணிந்தவன்’ படமும் இருக்கும் என்கிற எதிர்பார்ப்பை எதற்கும் துணிந்தவன் படத்தின்  ட்ரெய்லர் உணர்த்துகிறது.
தனக்கே உரிய குடும்ப சென்டிமெண்ட், கிராமத்துப் பின்னணி கதைக்களங்களில் திரைக்கதை அமைக்கும் பாண்டிராஜ், இப்படத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் பாலியல் வன்முறையை திரைக்கதையாக்கி இருக்கிறார் என்பதை. “இந்த ஊருக்கு வாய் மட்டும்தான் இருக்கும். காது?”..பொண்ணுங்கன்னாலே பலவீனமானவங்கன்னு நினைச்சிட்டிருக்காங்க. இல்ல.. பலம்னு ஆக்கணும்” போன்ற வசனங்கள் உணர்த்துகின்றன..