• Sat. May 4th, 2024

தமிழ்நாட்டுக்கு மோடி என்ன செய்தார் திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

Byகதிரவன்

Mar 23, 2024

தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பின் மகளிர் உரிமை தொகை, விடியல் பயண திட்டம், புதுமை பெண் திட்டம், காலை உணவு திட்டம், இல்லம் தேடி கல்வி திட்டம், நான் முதல்வன் திட்டம், மக்களை தேடி மருத்துவம் திட்டம், மக்களுடன் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம் – வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் திருச்சியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பேசினார்.

திருச்சி மற்றும் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் திருச்சி மாவட்டம் சிறுகனூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திருச்சி ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ, பெரம்பலூர் தி.மு.க வேட்பாளர் அருண் நேரு ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். இந்த பொதுக்கூட்டத்தில் தேர்தல் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, எஸ்.எஸ்.சிவசங்கர், அன்பில் மகேஷ், மெய்யனாதன், எம்.பிக்கள் ஆ.ராசா, திருச்சி சிவா, திருச்சி வேட்பாளர் துரை வைகோ, பெரம்பலூர் வேட்பாளர் அருண் நேரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் திருச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் துறை வைகோ பேசும்போது..

ஜனநாயகத்தை குழித்தோண்டி புதைத்து விட்ட மதவாத பா.ஜ.க வை வீழ்த்த சிறந்த கூட்டணியை முதலமைச்சர் உருவாக்கி தந்துள்ளார்.

இந்திய நாடே வியக்கும் வகையில் சிறந்த தேர்தல் அறிக்கையை தந்துள்ளார்.

அதில் குறிப்பாக சி.ஏ.ஏ சட்டம் ரத்து, 100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக உயர்த்துதள், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வட்டியில்லா கடன் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

செய்ய முடியாது என கூறியதை கூட செய்து முடித்து காட்டியவர் நம் முதலமைச்சர்.

ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு இல்லாமலேயே பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மீண்டும் பா.ஜ.க ஆட்சி அமைந்தால் சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் எதிரானது என்றார்.

இதனைத் தொடர்ந்து பெரம்பலூர் வேட்பாளர் அருண் நேரு பேசுகையில்…

திருச்சி மண்டலத்தில் நடந்த மாநாடுகளை ஒரமாக நின்று பார்த்துள்ளேன். பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு முன்னால் நான் உரையாற்றுவேன் என நினைத்து கூட பார்க்கவில்லை.

என்னை வேட்பாளராக அறிவித்த முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

பெரம்பலூருக்கு தேவையான திட்டங்களை ஒன்றியத்தில் அமைய உள்ள இந்தியா கூட்டணி மூலம் பெற்று தருவேன் என்றார்.

இதை அடுத்து தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின்…

நாம் இந்தியாவிக்கே திருப்பு முனை ஏற்படுத்த திரண்டுள்ளோம்.
கலைஞரின் நூற்றாண்டு பரிசாக மகத்தான வெற்றியை கொடுக்க நாம் திரண்டுள்ளோம்.
நாம் எழுத போகிற புதிய வரலாற்றுக்கு முன் பெரியார், அண்ணா, கலைஞரை வணங்குகிறேன்.

தி.மு.கவில் எல்லாவற்றுக்கும் தொடக்கமாக இருந்தது திருச்சியிதான்.
திருச்சி பாதை எப்பொழுதும் வெற்றி பாதை.
2021 ஆம் ஆண்டு விடியலுக்கான முழக்கம் என திருச்சியில் கூட்டம் அமைத்தோம் அதன் பின் மகத்தான வெற்றி பெற்றோம்

இந்த தேர்தல் பாசிச பா.ஜ.க வை விழ்த்துவதற்காக நடைபெறுகிற தேர்தல்.

தேர்தல் என்பதால் பிரதமர் தற்போது இந்தியாவில் இருக்கிறார். அதனால் அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருகிறார். இல்லையென்றால் அவர் வெளிநாட்டில் தான் இருப்பார்.

பா.ஜ.க வை பார்த்து தி.மு.க வினருக்கு தூக்கம் வரவில்லை என்கிறார் மோடி. ஆனால் தன் ஆட்சி முடிய போகிறது என்பதால் மோடிக்கு தான் தூக்கம் வரவில்லை. அவரின் தோல்வி பயம் அவரின் முகத்திலும் கண்களிலும் தெரிகிறது.

தமிழ்நாட்டின் நலனுக்காக மோடி என்ன செய்தார் என கேட்டால் இதுவரை மோடியிடம் பதில் இல்லை.

தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பின் மகளிர் உரிமை தொகை, விடியல் பயண திட்டம், புதுமை பெண் திட்டம், காலை உணவு திட்டம், இல்லம் தேடி கல்வி திட்டம், நான் முதல்வன் திட்டம், மக்களை தேடி மருத்துவம் திட்டம், மக்களுடன் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம்

எல்லா குடும்பத்திற்கும் பார்த்து பார்த்து குடும்பத்தில் ஒருவனாக திட்டங்களை திட்டி தருபவன் தான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.

தாங்க முடியாத நிதி நெருக்கடியிலும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம்.

ஆனால் மோடி தமிழ்நாட்டிற்காக எதுவும் செய்யவில்லை. மோடி தன் ஆட்சியின் தோல்விகளை மறைப்பதற்காக, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டதை மறைக்க தேவையில்லாததை பேசி திசை திருப்புகிறார்.

இனி உங்களின் கபட நாடகங்களை தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல இந்திய மக்களே நம்ப மாட்டார்கள்.

திருச்சி மாவட்டத்தில் புதிய பேருந்து முனையம், ஒலிம்பிக் அகாடமி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது

தற்போது வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தலைப்பு செய்தியாக பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, நீட் விலக்கு, ஜி.எஸ்.டி சீர்திருத்தம், சிறுபான்மை மக்களுக்கு எதிரான சட்டம் ரத்து செய்யப்படும் உள்ளிட்டவை அமைந்துள்ளன. திருச்சி மாவட்டத்தில் பொன்மலை ரெயில்வே பணிமனையை ரெயில் பெட்டி தொழிற்சாலையாக மாற்ற நடவடிக்கை, பால்பண்ணை முதல் துவாக்குடி வரை உயர்மட்ட சாலை, அணுகு சாலை அமைக்கப்படும் என தெரிவித்துள்ளோம்

மோடியால் அவரின் சாதனைகளை கூற முடியவில்லை. பத்தாண்டுகளில் ஊழல் இல்லாத ஆட்சி என்கிறார். ஆனால் பல ஊழல்களை அவர் செய்துள்ளார். அவர்கள் செய்த ஊழலில் இமாலய எடுத்துக்காட்டு தான் தேர்தல் பத்திர ஊழல்.

வருமான வரி துறை, அமலாக்கத்துறை உள்ளிட்டவற்றை கைப்பாவையாக பயன்படுத்தி ரெய்டுக்கு அனுப்பி அதன் பின் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற்றுள்ளார்கள்.

பாரத் மாலா திட்ட ஊழல், சுங்கச்சாவடி ஊழல், ஆயுஷ்மான் பாரத் ஊழல் என ரூ.7 லட்சம் கோடி ஊழல் நடந்ததாக சி.ஏ.ஜி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை.

இது தவிர PM கேர் ஊழல், ரபேல் ஊழல் நடந்துள்ளது. அதன் ரகசியங்கள் ஜீன் மாதம் இந்திய கூட்டணி ஆட்சி அமைந்த பின் வெளி வரும்.

பா.ஜ.க வின் தோல்வி பயம் தான் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட காரணம். இது அப்பட்டமாக பழி வாங்கும் நடவடிக்கை தான்.

மக்கள் பா.ஜ.க க்கு எதிராக ஒன்று திரண்டு விட்டார்கள் என தெரிந்து தோல்வி பயத்தால் இது போன்று செய்கிறார்கள்.

ஆளுநரை வைத்து தொந்தரவு செய்கிறார்கள். தமிழ் நாடு ஆளுநர் பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க மாட்டேன் என்றார். நாம் விடுவோமா நாம் உச்ச நீதிமன்றம் சென்றோம். அவர்கள் கண்டித்த பின் இன்று பதவி பிரமாணம் செய்து வைத்தார். உச்ச நீதிமன்றம் இது போன்று எந்த ஆளுநரையும் கண்டித்ததில்லை.

ராஜ் பவனிலிருந்து தேர்தல் வேலை தொடங்குகிறேன் என இன்று ஆளுநரிடம் கூறினேன். அவர் Best of Luck என்றார். ராஜ் பவனில் தொடங்கிய தேர்தல் பயணம் குடியரசு தலைவர் மாளிகை வரை செல்வோம்.

வரும் தேர்தல் இந்தியா கூட்டணிக்கும் பா.ஜ.க விற்கான தேர்தல் அல்ல இது மக்களுக்கும் பாசிசத்திற்குமான யுத்தம் இதில் மக்கள் தான் வெற்றி பெறுவார்கள்.

தமிழ் மீதும் தமிழ்நாட்டின் மீதும் மோடிக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு. தமிழுக்கு எதிராக செயல்பட்டு தமிழ் தான் மூத்த மொழி என நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.

அவரின் வெறுப்பு தீயின் விளைவாக பெங்களூரில் நடந்த குண்டு வெடிப்பிற்கு ஒன்றிய அமைச்சர் ஒருவர் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிகிறார்.
தமிழ்நாட்டு மக்களை கொச்சைப்படுத்தி வருகிறார்கள்.

பாசிச பா.ஜ.க மக்களிடமிருந்து சுரண்டுமே தவிர மக்களுக்கு எதுவும் செய்யாது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.

மக்களுக்கு நிவாரணம் வழங்குவது பிச்சை என நிர்மலா சீத்தாராமன் ஆணவமாக பேசிகிறார். மக்களுக்கு தருவது பிச்சை அல்ல அது அவர்களின் உரிமை ஆளும் அரசின் கடமை.

கார்ப்பரேட் கூட்டத்தில் இவ்வாறு பேசுவார்களா?

மக்களுக்கு உதவ முடியவில்லை என்றால் எதற்காக நிதி அமைச்சர் பதவி?

ஆணவம் தான் பா.ஜ.க வை வீழ்த்த போகிறது.

பா.ஜ.க விற்கு எதிராக பழனிச்சாமி எதுவும் பேசவில்லை. பழனிச்சாமி ஆட்சியின் அவலங்களை நீண்ட பட்டியல் போடலாம். ஊழல் செய்து அதிலிருந்து தன்னை பாதுகாத்து கொள்ள பா.ஜ.க வின் பாதம் தாங்கியாக இருந்தார்.
தற்போது பா.ஜ.க உடன் கூட்டணி இல்லை என கள்ள கூட்டணி நாடகம் போடுகிறார். விரைவில் அவர்களின் கள்ள கூட்டணி முடிவிற்கு வரும்.

உங்களின் புதிய இந்தியாவை உருவாக்கும் வாக்காக அமையும். அதற்காக இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக பெரியார், அண்ணா, கலைஞர் உருவப்படங்களுக்கு முதலமைச்சர் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த பொதுக்கூட்டத்தில் திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களை சேர்ந்த தி.மு.க வினர், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *