• Sat. May 18th, 2024

திமுகவை கண்டு ஓபிஎஸ்-ம்,டிடிவி தினகரனும் பயப்படுகிறார்கள்-தங்கம் தமிழ்ச்செல்வன் பேச்சு

ByP.Thangapandi

Mar 23, 2024

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தனியார் மண்டபத்தில் தேனி பாராளுமன்ற தேர்தல் குறித்து திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அமைச்சர் பி.மூர்த்தி, தேனி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்கதமிழ்ச் செல்வன் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தேனி திமுக வேட்பாளர் தங்கதமிழ்ச் செல்வன்.
உசிலம்பட்டி தொகுதியில் நீண்ட நாள் கோரிக்கையாக புறவழிச் சாலை வேண்டும் என்ற கோரிக்கை அதை செய்து கொடுக்க வேண்டும், பின் தங்கிய பகுதி தொழில் வளம் பெறுக வேண்டும், அது போக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைய திட்டங்களை மக்களுக்கு கொடுத்துள்ளார்., இந்தியா கூட்டணி தமிழ்நாட்டில் நிச்சயமாக 39 இடங்களிலும் வெற்றி பெறும், அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

அதிமுக தேர்தல் அறிக்கை குறித்த கேள்விக்கு..,
ஆளும் கட்சி திமுக, முதல்வர் மு.க.ஸ்டாலின், அவர் உருவாக்கிய திட்டம் தான் மகளீர் உரிமை தொகை திட்டம், மாதம் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்துக் கொண்டிருக்கிறார், கொடுப்பார்., இதையே இந்தியா முழுவதும் கொடுப்போம் என தேர்தல் அறிக்கையில் சொன்னோம், அதிமுக நாங்க ஜெயித்தால் என்கின்றனர்., நீங்க என்னைக்கு ஜெயிக்க, நடக்காத காரியத்தை வீம்புக்கு பேசுகின்றனர், இயற்கையாக கொடுக்கும் திட்டம், நல்ல திட்டம் என மக்கள் நினைக்கின்றனர்., அந்த திட்டத்தின் பேரில் திமுக கூட்டணி மிக பெரிய வெற்றி பெறும்.

உசிலம்பட்டி 58 கால்வாய் திட்டம் கலைஞர் கொண்டு வந்த திட்டம் பல மாறுபாடுகளுக்கு இடையே தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது., அதற்குண்டான தீர்வாக முதல்வரிடம் சொல்லி நிரந்தரமாக 58 கால்வாயில் தண்ணீர் வந்து இந்த பகுதியில் விவசாயம் செய்யும் நிலையை உருவாக்குவோம்.

டிடிவி தினகரன் சார்பில் ஏன் இன்னும் அறிவிப்பு கூட வரவில்லை, அறிவித்துவிட்டு களத்தில் இறங்க வேண்டியது தானே, தேர்தலுக்கு இன்னும் 15 நாட்களே உள்ளது, இன்னும் வேட்பாளரே அறிவிக்காமல் உள்ளனர் புரிந்து கொள்ளுங்கள் இதன் மூலம், தேனி மக்களவைத் தொகுதியில், ஏன் ஓபிஎஸ் என்னை எதிர்த்து களம் கண்டிருக்க வேண்டியது தானே, ஏன் இராமநாதபுரம் தொகுதிக்கு போக வேண்டும், அதற்கான அவசியம் என்ன? மூன்று முறை முதலமைச்சராக இருந்திருக்கிறார், 15 வருடம் அமைச்சராக இருந்திருக்கிறார்., பல ஆயிரம் கோடி சம்பாதித்து வைத்துள்ளார் எங்கே பாத்தாலும் ஓபிஎஸ் க்கு சொத்து உள்ளது., அவர் பிள்ளைகளும் பல ஆயிரம் கோடி சம்பாதித்து வைத்துள்ளனர்., பேஸ் உள்ள இடம் தேனி தொகுதி தானே இங்கையே நின்றிருக்கலாமே., ஏன் இராமநாடு போக வேண்டிய அவசியம் என்ன? என்ன காரணமென்றால் திமுக கூட்டணி வலுவாக உள்ளது எங்கு நின்றாலும் தோற்று போவோம் என்று தான் அக்கு அக்காக பிரிந்து போகிறார்கள், மக்கள் நல்ல தீர்ப்பை இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு கொடுப்பார்கள்.

டிஎன்டி சான்று ஒன்றை சான்றாக வேண்டும் என்பது நீண்ட நாள் போராட்டம் 1978 ல் இருந்து இந்த 48 சமூதாய மக்கள் போராடி வருகின்றனர். இந்த கோரிக்கையை முதல்வரிடம் வைத்தோம் அவர் இரண்டே நாளில் பரிசீலனை செய்து இரட்டை சான்று கூடாது ஒரே சான்று கொடுப்போம் என சொன்ன ஒரே முதல்வர், முதல்வர் ஸ்டாலின் அது எங்களுக்கு மிக பெரிய பலம் என பேட்டியளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *