• Sat. Apr 27th, 2024

நான் என்ன தவறு செய்தேன்.., மோகன்ராஜ் பளிச் பேட்டி..!

BySeenu

Oct 27, 2023

பாசி வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்து தற்போது இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆய்வாளர் மோகன்ராஜ் பேட்டி அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

பாசி வழக்கு விசாரணையின் போது, பணியில் இருந்த 2 ஆய்வாளர்கள் அப்போது இருந்த ஏடிஜிபி சொன்னதாக கூறி, அவர்களுக்கு உறவினர்களின் பணத்தை வாங்கி தர கூறினார்கள் என்றார். இது குறித்து சிபிஐ யிடம் தெரிவித்தும், என்னை மிரட்டி தவறான வாக்கு மூலம் தர வற்புறுத்தினார்கள் என தெரிவித்த அவர் என்னை தேடுவதாக கூறி எனது குழந்தைகள் படிக்கும் கல்லூரிக்கு சென்றார்கள் என தெரிவித்தார். இதனால் அவர்கள் படிக்க முடியாமல் போனதாகவும் கூறினார். நான் நியாயமாக பணியாற்றினேன், அதிகாரி செய்த தவறுக்கு நான் சிக்கியுள்ளேன் என்றார். மேலும் சிபிஐ பதிவு செய்துள்ள இந்த வழக்கு தவறான வழக்கு எனவும் தெரிவித்தார். தவறு செய்தவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர் என கூறிய அவர், அதனால் அவர்கள் தப்பி விட்டார்கள் என்ரார். நாங்கள் சட்டத்தை நம்புகிறோம் எனவும் நீதிமன்றத்தை நம்புகிறோம் நிச்சயமாக வழக்கில் நாங்கள் நிரபராதி என்பது தெரியும் என நம்பிக்கை தெரிவித்தார். அப்போதைய மேற்கு மண்டல ஐஜி மற்றும் திருப்பூர் எஸ்.பிக்கும் இடையே இருந்த அதிகார போட்டி உண்மை தான் எனவும் தெரிவித்தார்.
மேலும் நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என நீதிமன்றத்தில் கூறியுள்ளோம் ஆனால் சிபிஐ குற்றவாளி என்கிறது, நான் அயோக்கியனா என்பது ஆண்டவனுக்கு தெரியும் என்றார்.

46 வயதில் ஆய்வாளராக இருந்து டிஎஸ்பி ஆகும் சூழ்நிலையில் பணியிடை நீக்க ஆணையை கொடுத்துள்ளார்கள் என தெரிவித்த அவர். அப்படி என்ன தவறு செய்துவிட்டோம் என வேதனை தெரிவித்தார். நான் விசாரணை அதிகாரியாக இருந்தேன், அப்போது 100 பேர் செல்போனில் அழைத்து பணத்தைப் பெற்று தாருங்கள் என கேட்கிறார்கள்,அப்போது நான் பேசி தான் ஆக வேண்டும் எனவும் புகார் அளித்தவர்கள் கேட்பார்கள் தானே, இதை நான் சிபிசிஐடி யிடம் கூறினேன், ஆனால் அவர்கள் ஏற்றுகொள்ளவில்லை என தெரிவித்தார். சிபிஐ யில் கூறினாலும் நீங்கள் தப்பு செய்து விட்டீர்கள என கூறுகின்றனர் என்றார். நீதிமன்றமும் கேட்கவில்லை என்றால் மேல்முறையீடு செல்வேன் என தெரிவித்தார். எனக்கே இந்த நிலை என்றால் பாமர மக்கள் நிலை என்ன? எனவும் கேள்வி எழுப்பினார்.

ஆரம்பத்தில் சிபிசிஐடி விசாரணையின் போது மேல் அதிகாரிகள் உத்தரவு என கூறி எனது குழந்தைகள் படிக்கும் கல்லூரிக்கு சென்று மிரட்டினர் எனவும் காவல் துறையில் பணியாற்றியதற்கு நான் வெட்கப்படுகிறேன் எனவும் தெரிவித்தார். மேலிடத்தில் அழுத்தம் கொடுத்ததால் குற்றச்சாட்டு உறுதியானது என போடுகிறார்கள் எனவும் நான் வாங்கியதற்கு சாட்சி வேண்டும், பணத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டும், எதுமே இல்லாமல் வாங்கிவிட்டேன் என்றால் என்ன செய்ய முடியும் என கேள்வி எழுப்பினார்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்ற போது பாதிக்கப்பட்ட ஒருவர் புகார் மனு அளித்திருந்தார். அப்போது அதை உதவி ஆய்வாளர் ஒருவர் வாங்கியிருந்தார், எனக்கு தெரியாது எனவும் மீண்டும் அந்த நபர் ஒரு மாதம் கழித்து பணத்தை பெற்று தருமாறு கூறினார், ஆனால் பெற்று கொடுக்க முடியவில்லை என்றார். உடனடியாக எனக்கு சார்ஜ் மெமோ வழங்கினார்கள் எனவும் எஸ்.பி யிடம் கேட்ட பொது ஐஜி கூறிவிட்டார் நான் என்ன செய்ய முடியும் என கூறுகிறார் என்றார். ஐஜி கூறினால் தலையை வெட்டிவிடுவார்களா இப்படி தான் காவல் துறையில் பணியாற்றியுள்ளேன் எனவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை வாங்கி கொடுத்ததற்கு சார்ஜ் மெமோ கொடுத்து ஒரு ஆண்டுக்கு ஊதியத்தை நிறுத்தி விட்டார்கள் எப்படி காவல் துறையில் பணியாற்ற முடியும் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *