உசிலம்பட்டியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, 500க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு உசிலம்பட்டி திமுக நகர் கழகத்தின் சார்பில் நகர செயலாளர் தங்கப்பாண்டி நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார்.,

நேற்று முதல் துவங்கி நான்கு நாட்கள் நடைபெறும் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை நேற்று தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் இணைந்து சலவை தொழிலாளர்கள், முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி துவக்கி வைத்தனர்.,
இரண்டாம் நாளான இன்று உசிலம்பட்டி பகுதியில் உள்ள 500க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகளை உசிலம்பட்டி திமுக நகர செயலாளர் தங்கபாண்டி தலைமையிலான திமுக நிர்வாகிகள் வழங்கினர்.,

தொடர்ந்து நாளை சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கும், நாளை மறுநாள் மருத்துவ பணியாளர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.