மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக நகர் கழகத்தின் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் 102 -வது பிறந்த நாளை முன்னிட்டு உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுமார் 150 க்கும் மேற்பட்ட சலவைத் தொழிலாளர்களுக்கு திமுக நகரச் செயலாளர் எஸ். ஓ.ஆர். தங்கப்பாண்டியன் தலைமையில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில் உசிலம்பட்டி நகரம், உசிலம்பட்டி வடக்கு, தெற்கு, மேற்கு ஒன்றியங்கள், சேடப்பட்டி ஒன்றியம், செல்லம்பட்டி வடக்கு, தெற்கு ஒன்றியங்கள் மற்றும் எழுமலை பேரூராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட சலவை தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இதில் திமுக நகரம் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.