நெடுமதுரையில் உள்ள கலையரங்கத்தில் திமுக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 102 வது பிறந்த தின விழாவை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்ட மதுரை அணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு திருமங்கலம் ஒன்றிய செயலாளர் தங்கபாண்டியன் முன்னிலை வகித்தார். திருப்பரங்குன்றம் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் வேட்டையன் தலைமையில் நடைபெற்ற விழாவில் தெற்கு மாவட்ட மதுரை மகளிர் அணி செயலாளர் கிருத்திகா தங்கபாண்டியன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

ஒன்றிய கவுன்சிலர் காளிதாஸ் வலையங்குளம் வக்கீல் மலையன் ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் கிருத்திகா தங்கபாண்டியன் 1600 பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கினார்.
