தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட, பெருங்களத்தூர் வடக்கு பகுதியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

53வது வட்டம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, வட்ட செயலாளர் மற்றும் மாமன்ற உறுப்பினர் டி.ஆர். கோபி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாநகர பிரதிநிதி எஸ். சரவணன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகர செயலாளர் மற்றும் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா அவர்கள் கலந்து கொண்டு, திராவிட மாடல் அரசின் பல்வேறு சாதனைகள் குறித்து பொதுமக்களிடம் விளக்கமாக எடுத்துரைத்தார். தொடர்ந்து, பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

மேலும், தாம்பரம் மாநகராட்சி மேயர் க. வசந்தகுமாரி அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இதனுடன், 4வது மண்டலக்குழு தலைவர் டி. காமராஜ், 5வது மண்டலக்குழு தலைவர் எஸ். இந்திரன், தலைமை கழக பேச்சாளர்கள் கி. வேல்மணி மற்றும் ஜி. கருணாகர பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்று பொதுமக்களிடம் அரசின் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தனர்.

இந்த நிகழ்வில் மாமன்ற உறுப்பினர்கள், பகுதி கழக நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள், அணிகளின் பொறுப்பாளர்கள், கழக தோழர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை சமூக நல நிகழ்வாகக் கொண்டாடிய இந்த விழா, பெருங்களத்தூர் பகுதியில் பொதுமக்களின் நல்ல வரவேற்பைப் பெற்றது.







