மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் பெருமாள்புரம் அங்கன்வாடி மையத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

இவ்விழாவுக்கு அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பா.பாபு தலைமை வகித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், ஒன்றிய துணை செயலாளர் அ.பாலசுப்பிரமணியன், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் பொன்.ஜாண்சன், எஸ்.அன்பழகன், எம்.ஹெச்.நிசார், டி.கே.சுந்தரம், ஜானி, மாவட்ட பிரதிநிதிகள் ஜி.வினோத், பிரேம் ஆனந்த், கன்னியாகுமரி நகர இளைஞரணி அமைப்பாளர் சின்னமுட்டம் ஷ்யாம், கொட்டாரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் யோபு, கவுன்சிலர் பொன்முடி, மற்றும் நிர்வாகிகள் ராஜகோபால், ரூபின், மதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
