பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி ஜி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சேவை இருவார நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய தலைவர் மாரிச்செல்வம் அவர்கள் ஏற்பாட்டில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெம்பக்கோட்டையில் உள்ள சிபியோ உண்டு உறைவிட பள்ளியில் வைத்து வைத்து அங்கு பயிலும் மாணவச் செல்வங்களுக்கு ஓவியப்போட்டி, கட்டுரை போட்டி, படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் புகைப்படமும் பள்ளியில் மாட்டுவதற்காக வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாஜக விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் .சரவண துரை ராஜா, மாநில பொதுக்குழு உறுப்பினர். பொன்னு பாண்டியன்,மாவட்டச் செயலாளர் ரவிக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
