• Fri. Feb 27th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா..,

ByPrabhu Sekar

Feb 27, 2026

தாம்பரம் மாநகரம், தாம்பரம் மேற்கு பகுதி 47வது வட்டம் சார்பில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் ஆர்.கே. பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வட்ட செயலாளர் கே.டி.வி. முருகன் மற்றும் மாநகர பிரதிநிதி எம். கலைவாணன் ஆகியோர் வரவேற்புரை நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில் தாம்பரம் மாநகர செயலாளரும், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.ஆர். ராஜா அவர்கள் கலந்து கொண்டு, திராவிட மாடல் அரசின் பல்வேறு சாதனைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார். தொடர்ந்து, பல்வேறு தரப்பு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகராட்சி மேயர் க. வசந்தகுமாரி, 5வது மண்டல குழுத் தலைவர் மற்றும் தாம்பரம் மேற்கு பகுதி செயலாளர் S. இந்திரன், 4வது மண்டல குழுத் தலைவர் மற்றும் பெருங்களத்தூர் வடக்கு பகுதி செயலாளர் D. காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

மேலும், தலைமை கழக பேச்சாளர்கள் கி. வேலுமணி மற்றும் ஜி. கருணாகர பாண்டியன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து மாமன்ற உறுப்பினர்கள், பகுதி மற்றும் வட்ட கழக நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.