மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் திமுக தெற்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் ஆயிரம் நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மு மணிமாறன் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் தெற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் கிருத்திகா தங்கபாண்டியன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்.
தொடர்ந்து கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மணிமாறன் பேசும் போது:

சங்கிகள் இன்றைக்கு நடத்தினார்கள் முருகன் மாநாடு அவர்கள் முருகன் மாநாடு என்று நடத்தி இருந்தால் நாங்கள் கவலைப்பட போவதில்லை ஆனால் பெரியார் பேரறிஞர் அண்ணாவை கொச்சைப்படுத்தி பேசி இருக்கிறார்கள் ராஜன் செல்லப்பா உதயகுமார் செல்லூர் ராஜு சுயமரியாதையை விட்டுவிட்டு அங்கு மேடையில் அமர்ந்திருக்கிறார்கள் இப்படி பேசுவார்கள் என்று எங்களுக்கு தெரியாது என்று பச்சையாக பொய் சொல்கிறார்கள். மக்கள் வெறுக்கின்ற மோடியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு மலுப்பலாக பேசுகிறார்கள் பகுத்தறிவு போராளி பெரியாரை கொச்சைப்படுத்தி பேசியிருக்கிறார்கள் பாசிச வெறி பிடித்த பாஜகவினர். யாரையும் கோவிலுக்கு போக கூடாது என்று நாங்கள் சொல்லவில்லை கோவில் கொடியவரின் கூடாரமாகி விடக்கூடாது என்று தான் சொல்கிறோம் யார் நம்பிக்கையும் கெடுக்கிற மாதிரி நாங்கள் செயல்பட்டதில்லை.
யாரையும் கொச்சைப்படுத்தி பேசியதில்லை நம்பிக்கையோடு இருங்கள் மூடநம்பிக்கையோடு இருக்காதீர்கள். அது இப்போது அண்ணா திமுக இல்லை அமித்ஷா திமுக அதிமுகவின் உங்களுக்கு திட்டங்கள் கொண்டு வரப் போவதில்லை திட்டங்கள் கொண்டு வரப் போகுது திமுக தலைவர் தளபதி யார் அவர் மட்டும் என்று சொல்லிவிட முடியாது நாளை எதிர்காலம் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார் நம்மை வழி நடத்த வலுவான தலைமையின் கீழ் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என சிறப்பு உரையாற்றினார்.