சிவகாசியில் பெண்களுக்கும், மாணவிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
கணவரால் கைவிடப்பட்ட பெண்ணிற்கு தையல் இயந்திரம், 10 மாதக்குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்காக மருத்துவ உதவித்தொகை, ஒற்றைப் பெற்றோரின் மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி மற்றும் மளிகைப்பொருட்களுடன் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் அன்பால் இணைவோம் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கினர்.
மேலும், இந்நிகழ்ச்சியில்அன்பால் இணைவோம் மணி, காளிமுத்து, சாந்ததீபன், ஹரி, பாண்டி, மாரிமுத்து, செல்வகணேஷ் மற்றும் பூவேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அன்பால் இணைவோம் நிறுவனர் க.சதீஷ்குமார் நன்றி கூறினார்.