• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா..,

ByKalamegam Viswanathan

Jul 12, 2025

திருப்பரங்குன்றம் அருகே வளையங்குளத்தில் திமுக தெற்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

வலையங்குளத்தில் திமுக மகளிரணி சார்பில் நடைபெற்ற விழாவில் 2200 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வலையங்குளத்தில் மதுரை தெற்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை வகித்தார் திருப்பரங்குன்றம் மேற்கு ஒன்றிய செயலாளர் தனபாலன் வரவேற்புரை கூறினார். முன்னாள் திருப்பரங்குன்றம் ஒன்றிய தலைவர் வேட்டையன் மற்றும் மதுரை தெற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் கிருத்திகா தங்க பாண்டியன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

வலையங்குளம் ஊராட்சிக்குட்பட்ட 2200 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் சுகாதார பணியாளர்கள் 20 பேருக்கும் 5 கிரிக்கெட் அணிக்கு கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்கள் பரிசாக வழங்கப்பட்டது.