புதுடில்லியில் இளைஞர் விளையாட்டு சிலம்ப கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டியில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 11 மாணவ மாணவிகள் தங்கம் மற்றும் வெள்ளி வென்று ஊர் திரும்பியவர்களுக்கு திண்டுக்கல் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஒற்றைக்கம்பு,இரட்டைக்கம்பு,மான் கொம்பு, வேல்வீச்சு, வாள்வீச்சு, சுருள்வாள், செடிக்குச்சி,தொடு முறை போன்ற பிரிவில் நடைபெற்ற போட்டியில் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற சுமார் 1200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை கலந்து கொண்டனர்.
இதில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழு பேர் தங்கப் பதக்கமும்
ஒரு வெள்ளி பதக்கமும் மூன்று வெண்கலப் பதக்கமும் வென்று ஊர் திரும்பி அவர்களுக்கு திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்பொழுது தற்செயலாக சென்னையில் இருந்து திண்டுக்கல் திரும்பிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரிடம் மாணவ மாணவிகள் தங்கள் வாங்கிய பதக்கங்களை காண்பித்து வாழ்த்துக்களையும் பெற்றனர்.
தேசிய அளவில் நடைபெற்ற இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் நேபாளத்தில் நடைபெற உள்ள உலக அளவிலான சிலம்பாட்டம் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.