• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சாரணிய இயக்கத்தின் சார்பாக மாணவர்களுக்கு வரவேற்பு..,

ByS.Ariyanayagam

Dec 3, 2025

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மாணவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பாரத சாரண சாரணிய இயக்கத்தின் சார்பாக உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் கடந்த 23.11.2025 முதல் 29.11.2025 வரை 7 நாட்கள் 19 -ஆவது தேசிய பெருந்திரளணி நடைபெற்றது.

இதில் தமிழ்நாட்டின் சார்பாக திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து 8 சாரண மாணவர்கள், ஒரு சாரண ஆசிரியர் சிறப்பான முறையில் பங்கேற்றனர். இந்நிலையில் திண்டுக்கல் வருகை புரிந்த மாணவர்களை திண்டுக்கல் ரயில் நிலையத்தில், திண்டுக்கல் கல்வி மாவட்ட சாரண இயக்கத்தின் துணைத் தலைவர் அரசன் சண்முகம், துணை ஆணையர் எஸ்.கே.சி. சண்முகவேல் ஆகியோர் சாரண மாணவர்களுக்கும், ஆசிரியருக்கும் பூங்கொத்து கொடுத்து, பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி வரவேற்றனர்.

மேலும் மாவட்ட சங்கத்தின் சார்பாக மாணவர்களுக்கு இனிப்புகள் மற்றும் நினைவு பரிசு வழங்கியும் சிறப்பான முறையில் வரவேற்கப்பட்டனர். இந்நிகழ்வில் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் சந்திரசேகரன், மாவட்ட பயிற்சி ஆணையர் ராகவன், மாவட்ட பொருளாளர் கங்காதரன், சாரண இயக்க அமைப்பு ஆணையர் பாலமுருகன், உதவிச் செயலர் ஜான் கிரிஸ்டோபர் மற்றும் சாரண ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.