துபாயில் நடைபெற்ற ஆசியன் பாரா ஒலிம்பிக் போட்டியில் ஒற்றையர் பிரிவில் தங்கப்பதக்கம் என்ற மதுரை பொறியியல் கல்லூரி மாணவி சந்தியா விஸ்வநாதன் மதுரை வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் தாயார் கண்ணீர் மல்க வரவேற்பு.


மதுரை ஒய் புதுப்பட்டியை சேர்ந்தவர் விஸ்வநாதன் தனியார் பாதுகாவலராக வேலை பார்த்து வருகிறார் இவரது மனைவி கனகலட்சுமி அவர்களுக்கு சந்தியா என்ற மகள் உள்ளார்.

சந்தியா சிறுவயது முதலே இடது கை பதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி
திண்டுக்கல் தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு சிவில் இஞ்ஜினியரிங் படித்து வருகிறார் .
மேலும் பேட்மிட்டன் விளையாட்டில் சிறு வயது முதலே பல்வேறு பதக்கங்கள் பெற்று மாவட்ட, மாநில தேசிய அளவில் சாதனை புரிந்து வந்துள்ளார்.

தற்போது துபாயில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசியன் பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழகம் சார்பில் சென்று பேட்மிட்டன் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்
துபாயில் இருந்து இன்று விமானம் மூலம் மதுரை வந்த தங்கமங்கை சந்தியா விஸ்வநாதனுக்கு மதுரை விமான நிலையத்தில் பயிற்சியாளர் ரஞ்சித் பெற்றோர் மற்றும் நண்பர்கள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சந்தியாவின் தாயார் கனக லட்சுமி கண்ணீர் மல்க மகளை கட்டியணைத்து முத்தமிட்டு வரவேற்றார்.
தங்க பதக்கம் என்ற சந்தியா விஸ்வநாதன் கூறுகையில் துபாயில் நடைபெற்ற ஏசியன் தாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் என்று உள்ளேன்
நினைக்கிறேன் மதுரை விமான நிலையத்தில் என்னை வரவேற்றது எனக்கு பெருமையாக உள்ளது எனது தாயாரை நான் பெருமைப்படுத்தியதாக நினைக்கின்றேன் எனது பயிற்சியாளர் ரஞ்சித் மற்றும் நண்பர்கள் மகேந்திரன் அனைவருக்கும் நன்றி

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதல்வர் மு க ஸ்டாலின் அனைவருக்கும் நன்றி . விளையாட்டு துறையில் எனக்கு அவர்கள் செய்த உதவிக்கு மிகவும் நன்றி மிகவும் உதவிகரமாக இருந்தது. 14 பிறவிகளில் 1700 க்கும் மேற்பட்ட வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் பேட்மிட்டன் போட்டியில் 18 பேர் கலந்து கொண்டோம் இந்திய அணி சார்பில் பங்கு பெற்றதில் மொத்தம் ஒன்பது தங்கப்பதக்கம் 6 வெள்ளி பதக்கமும் வென்றுள்ளோம். தமிழகத்தின் சார்பில் பிரிவில் நான் தங்கம் வென்றுள்ளேன். இந்தோனேசியாவிற்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று தங்கம் வென்றுள்ளது பெருமையாக உள்ளது.
விளையாடிய போது எனக்கு பல்வேறு அழுத்தங்கள் இருந்தது ஆனாலும் சாதனை புரிந்தது மகிழ்ச்சியாக உள்ளது




