

மாநில உரிமை மீட்புக்கான கழக இளைஞர் அணியின் 2 ஆவது மாநில மாநாடு வரும் டிசம்பர் 17 ஆம் தேதி சேலத்தில் நடைபெறவுள்ளது. மாநாட்டின் முழக்கத்தை, தமிழ்நாட்டின் பட்டி தொட்டியெங்கும் சேர்க்கின்ற விதமாக, 188 இரு சக்கர வாகனங்களைக் கொண்ட வாகனப் பேரிணியாக விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதிக்கு வருகை தந்த இளைஞரணி படையினருக்க திருச்சுழி தொகுதி சார்பாக
இளைஞரணி மற்றும் கழக நிர்வாகிகள் சேர்ந்து வரவேற்று கொடுக்கப்பட்டது. திருச்சுழி ஒன்றியக்குழுத் தலைவர் பொன்னுத்தம்பி, பேருராட்சித்தலைவர் செந்தில், மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன். ஒன்றிய செயலாளர்கள் செல்லம், சந்தன பாண்டியன் உட்பட பலர் வரவேற்பு கொடுத்தனர்.

