கடலூர் மாவட்டம் வேப்பூர் சர்வீஸ் சாலையில் கோபால் மகன் முருகேசன் (50) என்பவர் கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக பாத்திரங்கள் மற்றும் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அவரது மகளுக்கு திட்டக்குடியில் வளைகாப்பு நடைபெற்றதால் காலையில் சென்று விட்டு இரவு எட்டு மணி அளவில் வந்து கடையை திறந்து வியாபாரம் செய்துள்ளார். இரவு 10 மணி அளவில் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்ற நிலையில் நேற்று காலை வழக்கம் போல் கடையை திறந்து உள்ளார்.
அப்பொழுது கடையின் பின்புறம் உள்ள தகர சீட்டை அறுத்து துளை ஏற்படுத்தி உள்ளே சென்று கல்யாண சீர்வரிசை பொருட்களான பித்தளை குடம் விளக்கு தட்டு தாம்பூலம் ஆகிய 1 லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேப்பூர் போலீசார் அங்குள்ள தடயங்களை சேகரித்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.













; ?>)
; ?>)
; ?>)