சென்னையிலிருந்து திண்டுக்கல் செவ்வதற்காக விமானம் மூலம் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.
விமான நிலையத்தில் தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் பேட்டி..
மும்மொழி கொள்கை தொகுதி சீரமைப்பு அடுத்து மீனவர்கள் பிரச்சனை தான் இன்றைக்கு பொறுத்த வரைக்கும் இந்த மூன்று தான் முக்கியமான பிரச்சனை.
அன்னை மொழி காப்போம் அனைத்து மொழியும் கற்போம் என்பதுதான் விஜயகாந்தின் வார்த்தை. தொகுதிகளை மறு சீரமைப்பு என்று குறைப்பதில் மத்திய அரசு செயல்பட்டால் போராட உறுதுணையாக இருக்கும்..
தொடர்ந்து இராமேஸ்வரம் மீனவர்கள் தாக்கப்படுவது ? தொடர் போராட்டம் உண்ணாவிரதம் குறித்த கேள்விக்கு?
கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும். கட்சத்தீவை விட்டுக் கொடுத்ததில் இருந்து தான் மீனவர்கள் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. பிரதமர் அவர்கள் ஸ்ரீலங்கா செல்லும்போது மீனவர்கள் மீதான தாக்குதல் நடைபெறாமல் இதற்காக உறுதியாள ஒப்பந்தத்தை போட வேண்டும்.

தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு?
இன்னும் ஒரு வருஷம் இருக்கு நிச்சயமாக அதன் காலம் வரும்போது அதற்கான பதில் வரும். இப்போது ஜோசியம் சொல்ல முடியாது. பொறுத்திருங்கள் அதற்கான காலம் வரும் அதற்கான அறிவிப்பு வரும்.
எம் பி சீட்டு தொடர்பாகப் தேமுதிக, அதிமுக இடையே நல்லுறவு தொடர்கிறதா..?
இல்லை, இல்லை அப்படி நிகழ்வு ஒன்றும் இல்லை என பிரேமாலதா விஜயகாந்த கூறினார்.








