தமிழ்நாடு அரசு பேருந்துகளில் அரசு போக்குவரத்து கழகம் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட நிலையில் இதற்கு முன்பு தமிழ்நாடு என்ற சொல்லை நீக்கியதை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் 50க்கும் மேற்பட்டோர் புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் உள்ள அரசு பேருந்துகளில் தமிழ்நாடு என்ற ஸ்டிக்கரை ஒட்டி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் திரண்ட நாம் தமிழர் கட்சியினர் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் பொன்வாசிநாதன் தலைமையில் புதிய பேருந்து நிலையத்தில் அங்கு நின்று கொண்டிருந்த அரசு பேருந்துகளில்தமிழ்நாடு அரசு என்ற ஸ்டிக்கரை ஒட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் ஏற்கனவே தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் என்று இருந்ததை தமிழக அரசு அரசு போக்குவரத்துக் கழகம் என்று மாற்றியதை கண்டித்து தற்பொழுது புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சியினர் தமிழ்நாடு என்ற ஸ்டிக்கரை ஒட்டி கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில்.
வாழ்வதற்கு தமிழ்நாடு ஆள்வதற்கு திராவிடமா. எங்கள் நாடு தமிழ்நாடு.
மறைக்காதே மறைக்காதே தமிழ்நாடு என்ற பெயரை மறைக்காதே.
பெயரை சூட்டு பெயரை சூட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் என்று பெயரை சூட்டு
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் என பெயரை மாற்றாவிட்டால் நாம் தமிழர் போராடுவோம்.
எங்கள் நாடு எங்கள் நாடு தமிழ்நாடு எங்கள் நாடு உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் அவர்களை தற்போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர் இதனால் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.




