• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தசைநார் சிதைவிற்கு புதிய மருத்து கண்டுபிடிக்க வேண்டும்.. மருத்துவர் ராகவன் கோரிக்கை.

Byகுமார்

Sep 5, 2022

நாட்டின் எதிர்கால இளைஞர்களின் நலன்கருதி தமிழக அரசு மத்திய அரசு விரைவாக தசைநார் சிதைவிற்கு புதிய மருத்து கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க மருத்துவர் ராகவன் கோரிக்கை.
மதுரை பெருங்குடியில் குழந்தைகளுக்கு ஏற்படும் தசைநார் சிதைவு நோயினால் முடம் மற்றும் உயரிழப்பு பாதிப்பு குறித்து (வீடியோ கான்பிரன்ஸ் ) காணொலி கருத்தரங்கம் நடைபெற்றது. உலக டூச்சேன் தசைநார் சிதைவு விழிப்புணர்தினம் பெருங்குடி ஜெய்கேர் மருத்துவமனையில் கொண்டாப்பட்டது. காணொலி கருத்தரங்கில் ஜப்பான் நரம்பியல் நிபுணர் யோஷிட்சுகு அவோக்கி,வியாட்நாம் வின் பல்கலை இயக்குநர் நுயென் லியோம், தான்சானியா நரம்பியல் நிபுணர் ஹென்றி ஹம்பா, பெங்களுரூ ஜெயின்ட் ஜான் ஆராய்ச்சி நிபுணர் ஜோதி ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் 3 வயது குழந்தைகளுக்கு தசைநார் சிதைவு ஏற்ப்படால் 5 வயது முதல் நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் வாழ்கையில் 15 வயது முதல் 18 வயதில் உடல் எடை, சுவாச குறைபாடு போன்ற பாதிப்புகளால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதற்கு தற்போதய ஆங்கில மருந்துகளில் உடல் வலி மற்றும் தற்காலிக நிவாரணம் ஏற்படுகிறது. தற்போது ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்ட நியூ ரீமிக்ஸ் முறையில் பீட்டா குளுக்கோன் உணவு பொருள் மூலம் தசைநார் சிதைவுக்கு பாதுகாப்பான மருந்தாக உள்ளது.
முதல் மற்றும் 2ம் கட்ட ஆய்வுகளினால் உறுதிசெய்யப்பட்ட நிலையில் மேலும் சோதனை தொடர்கிறது. தசைநார் சிதைவு நோயினால் ஏற்படும் உயரிழப்பால் இளைஞர் வளம் நம் நாட்டை பாதிப்படைகிறது. கொரானா போன்ற உயிர்கொல்லி நோய்க்கு அரசு விரைவு நடவடிக்கை எடுத்தது போல் நமது நாட்டின் எதிர்கால இளைஞர்களின் நலன்கருதி தமிழக அரசு மத்திய அரசு விரைவாக தசைநார் சிதைவிற்கு புதிய மருத்து கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க Dr. ராகவன் கோரிக்கை விடுத்துள்ளார்.