மத்திய-மாநில அரசுகளுக்கு இணைப்பு பாலமாக இருந்து, தமிழ்நாட்டிற்கும் ஒரு இணைப்பு பாலமாக இருந்து தமிழகத்தின் வளர்ச்சியை கடந்த 10 ஆண்டுகளில் வளர்ச்சியை மேம்படுத்தியதைப்போல இன்னும் வேகமாக தமிழகத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசிடம் இருந்து நிதி பெற்று தமிழகத்தின் மேம்பாட்டை நாம் உறுதி செய்ய வேண்டும். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் டாக்டர் L. முருகன் பேச்சு.
நாமக்கல் மாவட்டத்திற்கு இன்று22.6.24 பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, வருகை தந்த மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவரங்கள் துறை இணை அமைச்சர் டாக்டர் L. முருகனுக்கு, பாஜக மாநில தலைவர் டாக்டர் கே பி இராமலிங்கம் முன்னிலையில், திருச்செங்கோட்டில் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது, கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அவருக்கு சால்வை அணிவித்தும், மலர் மாலை அணிவித்தும் வரவேற்பு தெரிவித்தனர்.
பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை மத்திய அணை அமைச்சர் டாக்டர் L.முருகன் பெற்று கொண்டார். திருச்செங்கோட்டில் நடந்த இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றி பேசிய மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணைய அமைச்சர் டாக்டர் எல். முருகன் கூறியதாவது..,
பாரத பிரதமர் நரேந்திர மோடி வரலாற்று சிறப்புமிக்க மூன்றாவது முறையாக தொடர்ந்து பிரதமராக பொறுப்பேற்றுள்ளது. மிகப்பெரிய சாதனையாகும். அதில் தமிழ்நாட்டின் / நாமக்கல், நீலகிரி பிரதிநிதியாக நாமக்கல் கோனூரில் பிறந்த எனக்கு இரண்டாவது முறையாக வாய்ப்பு வழங்கி தமிழகத்தின் வளர்ச்சிக்கு கடந்த 10 ஆண்டுகளில் மட்டுமே கோடி 11 லட்சம் கோடி ரூபாயை தமிழ்நாட்டின் மேம்பாட்டுக்காக பிரதமர் நரேந்திர மோடி நிதி ஒதுக்கீடு செய்தார். இதன்மூலம் தமிழகம் மேம்பாடு அடைந்துள்ளது. இந்த மேம்பாடு/ வளர்ச்சித் திட்டங்கள் மீண்டும் தொடர்வதற்கு தமிழகத்தின் பிரதிநிதியாக நமது பிரதமர் ஒரு வாய்ப்பை தந்துள்ளார். அந்த வாய்ப்பை பயன்படுத்தி தேர்தலில் வேண்டுமானால் வெற்றி வாய்ப்பை தவற விட்டு இருக்கலாம். ஆனால் பிரதமர் அவர்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தமிழ்நாட்டின் மேம்பாட்டுக்காக தமிழர் அமைச்சரவையில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக்கி இந்த பொறுப்பை வழங்கி உள்ளார்.
இதற்கு தமிழக மக்களின் சார்பாகவும் நாமக்கல் மக்களின் சார்பாகவும் அனைவரின் சார்பாகவும் மீண்டும் ஒருமுறை பிரதமர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மீண்டும் வழங்கப்பட்டுள்ள இந்த வாய்ப்பு நமக்கு சேவை, பணி செய்வதற்கான வாய்ப்பு ஆகும். மத்திய, மாநில அரசுகளுக்கு இணைப்பு பாலமாக இருந்து, தமிழ்நாட்டிற்கும் ஒரு இணைப்பு பாலமாக இருந்து தமிழகத்தின் வளர்ச்சியை கடந்த 10 ஆண்டுகளில் வளர்ச்சியை மேம்படுத்தியோமோ அதைப்போல இன்னும் வேகமாக தமிழகத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசிடம் இருந்து நிதி பெற்று தமிழகத்தின் மேம்பாட்டை நாம் உறுதி செய்ய வேண்டும்.
நாமக்கல், திருச்செங்கோடு போன்றவை நல்ல தொழில் வளம் நிறைந்த பகுதியாகும். ரிக் லாரிகள், சரக்கு லாரிகள், கோழிப்பண்ணை போன்ற தொழில்கள் இந்தியா முழுவதும் சம்பந்தப்பட்ட தொழில்கள் நிறைந்த மாவட்டமாகும். எனவே இதனை மேம்படுத்த இப்பகுதி மக்களோடு இணைந்து இப்பகுதி மேம்படுத்துவதற்கு அனைவரின் ஒத்துழைப்போடு, ஒவ்வொருவரின் ஒத்துழைப்போடு இந்த பகுதியை மேம்படுத்துவதற்கு நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் தெரிவித்தார்.
இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு நாமக்கல் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் எம். இராஜேஷ்குமார் தலைமை வகித்தார். திருச்செங்கோடு நகர, மாநில, மாவட்ட நிர்வாகிகள் செங்கோட்டுவேல், தினேஷ்குமார், ஈஸ்வரன், ரமேஷ், மகேஸ்வரன், பூங்குழலி,பாலமுருகன், அய்யப்பன் ஆகியோர் உள்ளிட்ட கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.