இராஜபாளையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர் மருத்துவர். கார்த்திகேயன் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் கார்த்திகேயன் போட்டியிடுகிறார். இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய இராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா பகுதியில் இருந்து தப்பாட்டம், ஒயிலாட்டம் மற்றும் விவசாயி கொடியுடன் ஊர்வலமாக வந்து இராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி அமர்நாத்திடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். நாம் தமிழர் கட்சியினர் நாம் தமிழர் கட்சியின் சொந்தமான ஏர் கலப்பையை வரும் வழியில் ஊர்வலமாக எடுத்துயுடன் சென்றனர்.





