• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கைச்சின்னத்தை கார்த்திக் சிதம்பரம் பெற்று வந்தால் நாங்கள் வேலை பார்க்க தயார்.., சிவகங்கையில் காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர். ராமசாமி பேட்டி…

ByG.Suresh

Jan 27, 2024

சிவகங்கையில் காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அக்கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே ஆர் ராமசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் கொலை கொள்ளை அதிகரித்து வருவது உண்மைதான் என்றவர், இதனை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை முதல்வர் இன்னும் சிறப்பாக மேம்படுத்த வேண்டும் என விருப்பம் தெரிவித்தார். அடுத்த பிரதமராகும் வாய்ப்பு ராகுல் காந்தி தான் உள்ளதாகவும், இந்தியாவில் ராகுல் காந்தியை விட தகுதியான நபர் வேறு யாரும் இல்லை என்றும், ராகுல் காந்தி பிரதமர் ஆனால் தான் ஏழை எளிய மக்களின் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். வரும் 29ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து திமுகவுடன் பேச இருப்பதாகவும், அதில் காங்கிரஸ் கட்சி சார்பில் 15 இடங்களை கேட்க உள்ளதாகவும், காங்கிரஸில் இரண்டு அணிகள் இல்லை என்றும் உட்கட்சி பிரச்சனைகளை பேசி தீர்த்துக் கொள்வோம் என தெரிவித்தவர், காங்கிரஸ் கட்சி சார்பில் சிவகங்கை போட்டியிட கார்த்திக் சிதம்பரம் கை சின்னத்தை வாங்கி வந்தால் அவருக்கு வேலை பார்க்க தயாராக உள்ளதாகவும் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடுவதால் முன்னேற்றம் கிடையாது என்றவர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 6 தொகுதிகளும் மக்களுக்கு பணம் கொடுக்காமல் வெற்றி பெற்றதாகும். வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என உறுதிபடத் தெரிவித்தார். மேலும் அதிமுக 4 அணியாக பிரிந்து இருப்பதால் காங்கிரஸ் கூட்டணியை ஆதரிப்பதை தவிர மக்களுக்கு வேறு வழியில்லை என்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் வரவுள்ள தேர்தல் அறிக்கை காங்கிரஸ் கட்சிக்கு பலம் சேர்க்கும். தேர்தல் அறிக்கை மக்களுக்கு சாதகமாக அமையும் என்றும், ஆட்சிக்கு வந்தால் அதனை நிறைவேற்று தயாராக இருப்பதாகவும் கே ஆர். ராமசாமி தெரிவித்தார்.