• Tue. Jan 20th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

புண்ணிய பூமியான கன்னியாகுமரியில்.., கால்தடம் பதித்தது எங்களுக்குப் பெருமை..! கார்க்கில் – கன்னியாகுமரி சைக்கிள் பயணக் குழுவினர்..!

இந்தியத்தாயின் கால்தடம் பதிந்துள்ள இந்த புண்ணிய பூமியான கன்னியாகுரியில் நாங்களும் கால் தடம் பதித்து எங்களுக்குப் பெருமை என கார்கில் - கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணம் மேற்கொண்ட குழுவினர் உணர்ச்சி பொங்க தெரிவித்திருப்பது அனைவரையும் பெருமை அடைய வைத்திருக்கிறது.
   கார்க்கிலில் கடந்த (நவம்பர் 24)ம் நாள் இரண்டு பெண்கள் உட்பட 13 பேர், இந்தியாவின் தென் கோடி கன்னியாகுமரி வரையிலான சைக்கிள் பயணத்தை மேற் கொண்டனர். 
  சைக்கிள்கள் பயண குழுவினர் பல்வேறு கால நிலைகளை சந்தித்து 14 மாநிலங்களை கடந்து 3900 கிலோ மீட்டர் தூரத்தை சைக்கிளில் கடந்து இன்று கன்னியாகுமரி வந்து சேர்ந்தனர். தமிழக அரசின் சுற்றுலாத் துறையை சேர்ந்த சுற்றுலா அதிகாரி மற்றும் சுற்றுலா காவலர்கள், கார்க்கிலிருந்து வந்த சைக்கிள் பயணக் குழுவினரை வர வேற்றனர்.குழுவின் ஒருங்கிணைப்பாளரிடம், இவர்களின் சைக்கிள் பயண அனுபவம் பற்றி கேட்டபோது,காஷ்மீர் முதல் கன்னியாகுமரி. "இந்திய" மக்கள் நாம் என்ற உணர்வுடைய நாம் வேற்றுமையில் ஒற்றுமை காண்கிற மானிட சமுகம்.   மொழி, உடை, உணவு, நாகரீகம், கலாச்சாரம், மாநில எல்லைகள் என பல்வேறு வேற்றுமையிலும் ஒற்றுமையாக வாழ்கிற இந்திய சமுகம் என்பதை இந்த பயண குழுவினராகிய நாங்கள்  உணர்கிறோம். இந்திய   தாயின் கால் தடம் பதிந்துள்ள இந்த புண்ணிய பூமியான கன்னியாகுமரியில் நாங்களும் கால் பதித்து நிற்பது இந்த சைக்கிள் பயணம் தந்த பெருமை என கூட்டாக 13 பேரும் ஒற்றை குரலில் வெளிப்படுத்தினார்கள்.