• Mon. Apr 29th, 2024

அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற அரசியல் பிரபலங்கள்..!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கால் நூற்றாண்டுக்கு முன், கிறிஸ்துமஸ் விழா நெருங்கும் காலத்தில், குமரியின் மேற்கு மாவட்டத்தில் அருமனை பகுதியில், 1997-ம் ஆண்டு சில இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, அருமனை பகுதியில் உள்ள கடை நடத்துவோர் களிடம் அவர்கள் விரும்பி கொடுக்கும் நன்கொடையில்   குறைந்த எண்ணிக்கையில் சுவர் ஒட்டிகள், தகவலுக்கான கை ஏடுகள் ஒரு மேடை ஒலி பெருக்கி இவற்றுடன், சிறப்பு விருந்தினர், சில மேடை பேச்சாளர்கள், சிறுவர், சிறுமியர் பாடும் கிறிஸ்துமஸ் பாடல்கள் என தொடங்கியது தான் அருமனை கிறிஸ்துமஸ் விழாவின் தோற்றம். அருமனை கிறிஸ்துமஸ் விழாவின் முதல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றவர். தமிழக அரசின் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், அன்றைய மாவட்ட பஞ்சாயத்து தலைவர் என்ற பதவியின் மரியாதையுடன் பங்கேற்றார். ஆண்டுக்கு, ஆண்டு அருமனை கிறிஸ்துமஸ் விழா வில் பங்கேற்ற பிரமுகர்கள் ஒவ்வொருவரையும் திரும்பி பார்த்தால், அருமனை கிறிஸ்துமஸ் விழாவின் ஒருங்கிணைப்பு இளைஞர்களின் உற்சாகம், அழைத்து வந்த விருந்தினர்கள் வி வி ஐ பி க்கள் இருந்தது தான் தனிச்சிறப்பு. 
கடந்த காலத்தில் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற முதலமைச்சர்கள். எடப்பாடி பழனிச்சாமி, நாராயணசாமி, உம்மன் சாண்டி வரிசையில், இந்த ஆண்டு 26_வது அருமனை கிறிஸ்துமஸ் விழாவின் சிறப்பு விருந்தினர் கர்நாடக மாநிலத்தின் முதல்வர் சித்தராமையா பங்கேற்பதை விழா ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் அருமனை ஸ்டீபன் தெரிவித்தார்.
அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் முன்னாள் முதல்வர் என்ற நிலையில்  ஜெயலலிதா பங்கேற்ற விழாவில் அவர் பேச்சின் உன்னதமாக வெளிப்படுத்திய கருத்து.

  ஜெயலலிதா பங்கேற்ற அந்த விழா நாளுக்கு  பிறகு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான காலமாக இருந்த நிலையில்,ஜெயலலிதா வெளிப்படுத்திய கருத்து.

26_ஆண்டுகளுக்கு முன் முதல் அருமனை கிறிஸ்துமஸ் விழாவின் சிறப்பு விருந்தினர்.

கர்த்தரின் அருளால் கழக ஆட்சி அமைந்தால். குமரி மாவட்டத்தில் பட்டா இடங்களில் தேவாலயம் கட்ட தடையில்லாத அனுமதி வழங்கப்படும் என அறிவித்தது. குமரி மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க, தென்னிந்திய திருச்சபை, பெந்தகோஸ்து, லுத்தர்மிஷன், சால்வேசன் ஆர்மி உட்பட கிறிஸ்தவ மதத்தின் அனைத்து கிறிஸ்தவ பிரிவுகள் இடையே உற்சாகம் பரவியது. நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஜெயலலிதா தலைமையில் மீண்டும் ஆட்சி அமைத்தது.
அரசியல் தலைவர்கள் வரிசையில் இரண்டு நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்.,ஜி.கே.வாசன், வசந்த குமார், இளங்கோவன், டி.டி.வி.தினகரன், சரத்குமார் என ஒரு நீண்ட வரிசையில் தமிழக அரசியல் தலைவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி இந்த ஆண்டு நிகழ்வில்,
கர்னாடக மாநிலத்தின் முதல்வர் சித்தராமையாவை, அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்க,விழா அமைப்பின் தலைவர் ஸ்டீபன் முதலில் நாடியது. மக்களவை காங்கிரஸ் உறுப்பினர்கள் விஜய் வசந்த், டாக்டர்.செல்லகுமாரை நாடினார் (இருவரும் குமரியை சேர்ந்தவர்கள்)
குமரி அருமனை கிறிஸ்துமஸ் விழா எதிர் வரும் 22,23 ம் தேதிகளில் விழா காணும் நிலையில், அருமனை கிறிஸ்துமஸ் விழாவின் தொடக்கம் 1977_ல் நடந்த அந்த முதல், இவ்வாண்டு 26-வது விழாவாக கொண்டாட இருக்கும் நிலையில்,
அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் வரிசையை திரும்பி பார்த்தால், ஸ்டாலின், ஜி.கே.வாசன், வசந்த குமார், திருமாவளவன் (இரண்டு முறை) இளங்கோவன், சரத்குமார், சச்சின் பைலட் என ஒரு வரிசை கடந்த கால நிகழ்வின் சிறப்பு விருந்தினர்கள்.

கடந்த ஆண்டு நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவின் பதிவு.

அருமனை கிறிஸ்துமஸ் இவ்வாண்டு விழா டிசம்பர் திங்களில் 22,23-ம் நாட்களில் நடக்கவிருக்கும் நிலையில் இரண்டாம் நாள் விழாவில் கர்நாடக மாநிலத்தின் முதல்வர் சித்தராமையா பங்கேற்கும் விழாவில், மக்களவை காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள், விஜய் வசந்த், டாக்டர்.செல்லகுமார், பெரம்பலூர் மக்களவை உறுப்பினர் டாக்டர்.பாரிவேந்தர் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ், ராஜேஷ் குமார், விஜயதரணி நாகர்கோவில் மக்களவை முன்னாள் உறுப்பினர் ஹெலன் டேவிட்சன் ஆகியோர் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *