• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

100% மது ஒழிப்புக்கான அரசியலை மட்டும் முன்னிறுத்துகிறோம் இதில் 0.1% ஒரு சதம் கூட தேர்தல் கூட்டணி கணக்கு கிடையாது-தொல். திருமாவளவன்

ByKalamegam Viswanathan

Sep 14, 2024

திமுகவோடு கூட்டணியில் தான் உள்ளோம்.
தேர்தல் கூட்டணி கணக்கு இல்லை

  • மது ஒழிப்பில் பாமகவும், பாஜகவும் உள்ளனர் ஒருவர் ஜாதி கட்சியாகவும், ஒருவர் மதவாத கட்சியாகவும் இருப்பதால் அவர்களோடு கொள்கை ரீதியாக கூட்டணி வைக்க முடியாது – தொல். திருமாவளவன்

கடைசி மக்களுக்கு ஜனநாயகம் எளிய மக்களுக்கு அதிகாரம் என்பதுதான். எல்லா மேடைகளிலும் மூப்பனாரே திருமாவளவன் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்கிற முழக்கத்தை முன் வைக்கிறார். அவரை நான் வரவேற்று பாராட்டுகிறேன். என்று 1999-லேயே பேசியிருக்கிறார். அதை நினைவுப்படுத்தி நான் செங்கல்பட்டில் பேசினேன். அந்தப் பேச்சை எடுத்து என்னுடைய அட்மின் நிர்வாக குழுவில் இருப்பவர்கள் பதிவு செய்து விட்டார்கள் என்று கருதுகிறேன். ஏன் அதை எடுத்தார்கள் என்று தெரியவில்லை இன்னும் நான் அவர்களிடம் தொடர்பு கொண்டு பேசவில்லை. -தொல் திருமாவளவன் பேட்டி

மதுரை அவனியாபுரத்தில் மாவீரன் மலைச்சாமி நினைவேந்தல் கூட்டத்தில் பங்கேற்ற விசிக தலைவர் தொல். திருமாவளவன் மலைச்சாமியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி விட்டு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில்:

நாங்கள் தேர்தல் அரசியலில் அடி எடுத்து வைத்த காலத்தில் இருந்து நாங்கள் முன்வைத்து வரக்கூடிய கருத்து தான் அது புதிதாக பேசவில்லை.
தலைவர் மூப்பனார் ரோடு கைகோர்த்து தேர்தல் அரசியலில் அடியெடுத்து வைத்த போது நாங்கள் வைத்த முழக்கம் கடைசி மக்களுக்கு ஜனநாயகம் எளிய மக்களுக்கு அதிகாரம் என்பதுதான். எல்லா மேடைகளிலும் மூப்பனாரே திருமாவளவன் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்கிற முழக்கத்தை வைக்கிறார் .
அவரை நான் வரவேற்று பாராட்டுகிறேன் என்று 1999 லேயே பேசியிருக்கிறார்.

அதை நினைவுப்படுத்தி நான் செங்கல்பட்டில் பேசினேன். அந்தப் பேச்சை எடுத்து என்னுடைய அட்மின் நிர்வாக குழுவில் இருப்பவர்கள் பதிவு செய்து விட்டார்கள் என்று கருதுகிறேன். ஏன் அதை எடுத்தார்கள் என்று தெரியவில்லை இன்னும் நான் அவர்களிடம் தொடர்பு கொண்டு பேசவில்லை.

நான் டெல்லியில் இருந்து வந்தேன் மதுரை வந்த பிறகு தான் எனக்கு தெரியும் இன்னும் நான் அவர்களிடத்தில் பேசவில்லை. அது இப்போது வச்ச கோரிக்கை அல்ல 99 இல் தேர்தலில் அடி எடுத்து வைக்கும் போது நெய்வேலியில் சொன்னது.

இது ஜனநாயக பூர்வமான முழக்கம் நான் முழுமையாக உடன்படுகிறேன் நமது கட்சி ஆட்சிக்கு வந்தால் அதிகாரத்தை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்கிற முழக்கத்தை நான் வரவேற்கிறேன் என்று பேசி இருந்தார்.

நேற்று அதை நான் மேற்கோள் காட்டி பேசியிருந்த உரையை தான் தற்போது குருப்பில் போட்டிருக்கிறார்கள்.

இப்போது ஜனநாயகத்திற்கு விரோதமான ஆட்சியா நடைபெறுகிறது அப்படி இல்லை ஜனநாயக பரவலாக்கத்தில் அதிகார பரவலாக்கம் முக்கியமானது. அதை எப்போதும் பேசலாம் எப்போதும் கேட்கலாம் தவறில்லை.

தற்போது தேர்தல் சமயம் இல்லை நான் கேட்டிருந்தால் 2021ல் கேட்டிருக்கலாம் இல்லையென்றால் 2026-ல் தான் கேட்க முடியும். சிலருடைய வியூகம் அதுபோல இந்த இடத்திலும் விடுதலை சிறுத்தைகள் பேசவில்லை

நாங்கள் மது ஒழிப்பு மற்றும் போதைப் பொருள் மகளிர் மாநாடு அக்டோபர் இரண்டில் நடத்துகிறோம். தமிழ்நாட்டில் உள்ள எல்லா கட்சிகளும் மதுவிலக்கு கொள்கை உடைய கட்சிகள் தான். மது கடைகளை மூடுவதற்கு அப்புறம் என்ன தயக்கம் என நான் கேள்வி எழுப்பினேன் அதற்கு பத்திரிக்கையாளர்கள் சராசரியாக சில கேள்விகளை கேட்டார்கள்.

அனைத்து கட்சிகளுக்கும் பொதுவாக தான் அறைகோல் விடுக்கிறேன். தேர்தலுக்கும் இதற்கும் முடித்து போடக்கூடாது என்று சொல்லும்போதே சொல்லி இருந்தேன்.

பாமகவும், பாஜகவும் மது ஒழிப்பு கொள்கையில் உள்ளனர் அவர்களோடு கொள்கையில் உடன்பட முடியாது ஒரு ஜாதி கட்சி மற்றும் ஒரு மத கட்சி அவர்களோடு கொள்கை ரீதியாக கூட்டணி வைக்க முடியாது.

காவிரி நீர், ஈழத்தமிழர் பிரச்சனையில் ஒன்று சேருங்கள் என்று சொல்வோம் அதைப்போல மது ஒழிப்பு பிரச்சனையில் பிஜேபி உட்பட அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று சொல்கிறோம் ஆனால் பாஜகவுக்கு எங்களுடன் சேர முடியாத ஒரு நெருடல் உள்ளது. பாமகவும் மதுவிலக்கை சொல்லக்கூடிய கட்சி தான் ஆனால் விடுதலை சிறுத்தைகளுக்கும் பாமகவுக்கும் கடந்த கசப்பான அனுபவங்கள் உள்ளது. எனவே அவர்களுடன் எந்த காலத்திலும் எங்களால் சமரசம் செய்ய முடியாது.

மற்ற கட்சிகள் யார் வேண்டுமென்றாலும் வரலாம் என்று அந்த கேள்விக்கு நான் விடை சொன்னேன் இப்போது ஊதிப் பெருக்குகிறார்கள். இப்போது நாங்கள் திமுக கூட்டணியில் தான் உள்ளோம் அதில் இந்த விட சிக்கலும் இல்லை.

மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா பொறுப்பேற்ற நாளிலிருந்து எங்கே கொடி ஏற்றினாலும் அவர் தேவையில்லாமல் குறிக்கீடுகிறார். அடிக்கடி ஏதேனும் பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார்.

உயர்நீதிமன்றத்தில் ஆணை பெற்ற பிறகும் திருமங்கலம் அருகே மேலப்பட்டி என்கிற இந்த இடத்தில் விசிக கொடியேற்ற அனுமதி தாருங்கள் என்று சொன்ன பிறகும் அனுமதி தர மறுக்கிறார். இப்போது புதூருக்கு அருகில் ஏற்கனவே இருந்த கொடிக்கம்பம் அகற்றப்பட்டது அதை தற்போது 20 அடி உள்ளே கொடிக்கம்பம் வைப்பதற்கு ஏற்கனவே அனுமதி கொடுத்து இருப்பதால் எதற்கு என்கிறார்கள்.

மதுரை கார்ப்ரேசன் இன் அனுமதி தர வேண்டும் என்கிறார் இது தனிப்பட்ட முறையில் இந்த மாவட்ட ஆட்சித் தலைவர் விசிகவிற்கு எதிராக செயல்படுவது தெரிகிறது இதை மூத்த அமைச்சர்கள் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம்.

பாஜக, பாமக உடன் சேர்ந்தால் நாங்கள் கரப்ட் ஆகி விடுவோம். அவர்கள் திடீரென எங்களுக்கு எதிராக திரும்பி அவதூறுகளை பரப்பினார்கள்.

மது ஒழிப்பில் உடன்பாடு உள்ள யாரும் கலந்து கொள்ளலாம் என்று நான் சொன்னேன். யார் யாரை அழைப்பது என்று நாங்கள் முடிவு செய்யவில்லை யாருக்கும் அதிகாரப்பூர்வமாக அழைப்பு கொடுக்கவில்லை .

இருப்பது இன்னும் 15 நாட்கள் தான் நாங்கள் உயர்நிலைக் குழுவில் முடிவு செய்து யாரை அழைப்போம் என்று முடிவு எடுப்போம். பாதிக்கப்படுகிற பெண்கள் கண்ணீர் விடுகின்ற, பெண்களின் வலியை பேசாமல் கூட்டணி கணக்குகளை பற்றி பேசி இதை மடை மாற்றம் செய்கிறார்கள்.

கண்ணீர் விட்டு கதறுகின்ற தாய்மார்களின் கண்ணீரை துடைப்பதற்கு தான் இந்த மாநாட்டை நடத்துகிறோம் தவிர இதில் எந்தவித தேர்தல் கூட்டணி கணக்கு இல்லை. இதை நான் தேர்தலுக்கு நடத்தினால் இதை விட அசிங்கம் வேறு எதுவும் இல்லை.

கள்ளக்குறிச்சி சென்று விட்ட வந்த பிறகு அந்த மக்கள் சொன்ன குறை தான் நீங்கள் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட மாட்டீர்களா என்று அந்த மக்கள் கேட்பார்கள் அதனால் தான் உடனடியாக போராட்டத்தை அறிவித்தேன். இது 100% மது ஒழிப்புக்கான அரசியலை மட்டும் முன்னிறுத்துகிறோம் இதில் 0.1% ஒரு சதம் கூட தேர்தல் கூட்டணி கணக்கு கிடையாது என கூறினார்.