• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

போரில் நாங்கள் தனித்துவிடப்பட்டுள்ளோம்- உக்ரைன் அதிபர் வேதனை

‘ரஷ்யாவுடனான போரை எதிர்கொள்ளும் நிலையில், உலக நாடுகள் எதுவும் உக்ரைனுக்கு உதவவில்லை. இதனால் ரஷ்யாவுடனான போரில் உக்ரைன் தனித்து விடப்பட்டுள்ளது’ என அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் பல நகரங்கள் மீது குண்டு வீசியும், தரைப்படையினருடன் நுழைந்தும் ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நாட்டு மக்களிடம் நேற்று இரவு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ‘ரஷ்யா பெரிய அளவில் உக்ரைனுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், வல்லரசின் படையை எதிர்த்து உக்ரைன் தனித்துப் போரிட்டு வருகின்றது. ரஷ்ய படைகளை எதிர்கொள்வதில் உக்ரைன் தனித்து விடப்பட்டு விட்டது. உக்ரைனுடன் இணைந்து ரஷ்யாவை எதிர்கொள்ள யாராவது இருக்கிறார்களா என்றால், இல்லை என்பதுதான் பதில்’ என்று உருக்காமாக கூறினார்.

நேட்டோவில் உக்ரைனை உறுப்பினராக்க யார் தயாராக இருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பிய அவர், உக்ரைனை ஆதரிப்பதாகக் கூறியவர்கள் அனைவரும் இப்போது அஞ்சுகிறார்கள் என்றும் குற்றம்சாட்டினார். ஜெலன்ஸ்கி பேசுகையில், ‘ரஷ்யாவின் தாக்குதலில் இதுவரை ராணுவத்தினர், பொதுமக்கள் 130க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர். ரஷ்ய படைகள் என்னையும் என் குடும்பத்தினரையும் முதல் எதிரியாக குறிவைத்துள்ளது. தலைநகர் கீவில்தான் தற்போதும் இருக்கிறது’ எனக்கூறியுள்ளார்.
இதற்கிடையே, உக்ரைனில் இருந்து 18 வயது முதல் 60 வயது வரையிலான ஆண்கள் நாட்டைவிட்டு வெளியேற அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் அச்சத்தில் உறைந்துள்ள உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர்.