• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

“எமக்குத் தொழில் ரொமான்ஸ்” ஓ.டி.டி தளத்தில் ஸ்ட்ரீ

Byஜெ.துரை

Feb 2, 2025

நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் திரைக்கு வந்த “எமக்குத் தொழில் ரொமான்ஸ்” திரைப்படம் இன்று முதல் ஓ.டி.டி தளத்தில் ஸ்ட்ரீமாகிறது!!!

அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கத்தில், அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா நடிப்பில் கலக்கலான காதல் நகைச்சுவை திரைப்படமாகத் திரையரங்குகளில் வெற்றியைக் குவித்த படம் “எமக்குத் தொழில் ரொமான்ஸ்”

இப்படத்தின் ஒடிடி வெளியீட்டை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த நிலையில், தற்போது “சன் நெக்ஸ்ட்” ஓடிடி தளத்தில் இன்று முதல் ஸ்ட்ரீமாகிறது.

ரொமான்ஸ் பொங்கி வழியும் ஒரு இளைஞனின் காதல், அதனால் ஏற்படும் பிரச்சனைகள், அவனுக்கு உதவும் குடும்பம், நண்பர்கள் என, அசத்தலான ரொமான்ஸ் காமெடியாக, இன்றைய இளைஞர்களைக் கவரும் வகையில், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படமாக உருவாகியிருந்த இப்படம் திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

நடிகர் அசோக் செல்வன், அவந்திகா மிஷ்ரா முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில் நடிகை ஊர்வசி மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் அழகம் பெருமாள், பக்ஸ், எம்.எஸ்.பாஸ்கர், விஜய் வரதராஜ், படவா கோபி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் K பிரசன்னா இசையமைத்துள்ளார். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்ய, எடிட்டராக ஜெரோம் ஆலன் பணியாற்றியுள்ளார். பாடாலாசிரியர் மோகன் ராஜன் பாடல்கள் எழுதியுள்ளார். பிரவீன் ராஜா காஸ்ட்யூம் டிசைன் செய்துள்ளார்.