புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் அமிர்த திட்டத்திற்கு 10 கோடி ரூபாய் மதிப்பில் அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் ரகுபதி பேசுகையில்,
அமைச்சர் கே என் நேரு மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிந்து உள்ளது இதைத்தான் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி நேற்று கூறினார். உயர் நீதிமன்றம் கூறிய பிறகு வழக்குப் பதியாமல் இருக்க முடியுமா கே என் நேரு மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டு விட்டது.
நீதிமன்றம் கூறுவதற்கு முன்பே லஞ்ச ஒழிப்புத்துறை கே என் நேரு மீது வழக்கு பதிவு செய்துவிட்டது. தமிழக வெற்றி கழகம் திமுகவிற்கு ஒரு பொருட்டே அல்ல. மூன்றாவது இடத்தை இருக்கும் ஆட்களை குறித்து நாங்கள் பேச தயாராக இல்லை. தேமுதிக கூட்டணிக்குள் கொண்டு வந்தது முதல்வரின் சாணக்கியத்தனம்.
இந்திய அரசியலில் சிறப்பாக காய்களை நடத்திக் கொண்டு செல்பவர் முதல்வர் கண்டிப்பாக 200 தொகுதிகளில் மட்டுமல்லாமல் அதற்கு மேலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்.
எத்தனை முறை போட்டிருந்தாலும் அனைவரையும் சமமாக தான் நாங்கள் பார்ப்போம் நாங்கள் எங்களுடைய வெற்றி இலக்கை நெருங்கிக் கொண்டுள்ளோம்.

நாங்கள் சர்வேக்களை பொருத்தாக எடுத்துக் கொள்வது கிடையாது உழைப்பை தான் பொருத்தாக எடுத்துக் கொண்டு வேலை பார்த்துள்ளோம். எங்களுடைய உழைப்பின் மீது நம்பிக்கை உள்ளது நாங்கள் ஐந்து வருடம் கஷ்டப்பட்டுள்ளோம் ஒவ்வொரு வாக்காளரையும் மூன்று முறை ஐந்து ஆண்டு காலத்தில் நாங்கள் சந்தித்துள்ளோம்.
இந்த தேர்தலில் வித்தியாசமான அணுகுமுறையை திமுக செய்து கொண்டு வருகிறது
எடப்பாடி பழனிச்சாமி அனைத்துக்கும் வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும் என்று கேட்பார் அவருக்கு அதுதான் பிழைப்பு.
சட்டசபையில் ஓபிஎஸ் ஆதரவாளர் முதல்வரை புகழ்ந்து பேசியது திமுக கூட்டணியில் ஓபிஎஸ் இணைகிறார் என்பதற்கு அடையாளமாக எடுத்துக் கொள்ளலாம் கூட்டணிக்கு யார் வந்தாலும் அவர்களே அரவணைத்துக் கொள்வதுதான் முதல்வர்.
திமுக ஆட்சி என்பது எம்ஜிஆர் ஜெயலலிதாவின் ஆட்சி பெற்ற ஆட்சியாகவும் இருந்துள்ளது.
எந்த நிதியையும் இந்த அரசு மடைமாற்றம் செய்யவில்லை
எந்த நிதியை நாங்கள் வேறு திட்டத்திற்கு செலவழித்து இருக்கிறோம் என்று நைனார் நாகேந்திரன் ஆதாரத்தோடு கூற வேண்டும்.
குறிப்பாக ஆதி திராவிட நலத்துறை நிதியை முழுமையாக தமிழக அரசு பயன்படுத்தி உள்ளது.
திமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்ததால் விஜயகாந்த் மன்னிக்காது என்று பாஜக கூறக்கூடாது விஜயகாந்தின் வாரிசுகள் கூற வேண்டும்
பாஜக விஜய்காந்தின் வாரிசு அல்ல.
விஜயகாந்தின் ஆன்மா இந்த கூட்டணியை வாழ்த்தும் இது தமிழ்நாட்டிற்கு தேவையான கூட்டணி என்று விஜயகாந்தும் வாழ்த்து கூறுவார்.
யாருக்கும் செக் வைப்பதற்காக தேமுதிக கூட்டணியில் சேர்க்கவில்லை எல்லாரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்பதற்காக தான் தேமுதிக இந்த கூட்டணியில் நாங்கள் சேர்த்துள்ளோம். வளமான கூட்டணியாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் தேமுதிக சேர்க்கப்பட்டுள்ளது.
தோழமைக்கு மரியாதை தருகிற மதிப்பு தருகிற ஒரே அரசியல் தலைவர் நம்முடைய முதல்வர்தான் இவ்வாறு அவர் பேசினார்.






