புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் புதுக்கோட்டை இணைந்து நீர் மேலாண்மை பயன்பாட்டிற்காக
1966 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட தரைக்கேணியில் உள்ள நீரை தொழில் பயிற்சி நிலைய மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் புதிய வழித்தடமாக தரைக்கேணியில் இருந்து சுமார் 750 அடி தொலைவில் பைப் லைன் அமைக்க உதவியாக JCP பொக்லைன் கொண்டு நீர் கொண்டு வர வழி ஏற்படுத்தி தரும் நிகழ்ச்சியில் நிலைய முதல்வர் பாலசுப்பிரமணியன் வழிகாட்டுதலின் பேரில் சங்கத் தலைவர் AR.முகமது அப்துல்லா தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக வருகை தந்த அனைவரையும் சங்க பொருளாளர் கண.மோகன் ராஜா வரவேற்றார். ரோட்டரி மாவட்டம் 3000தின் மாவட்ட செயலாளர் MA.முருகப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை ஆளுநர் B.அசோகன், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய நிர்வாக அலுவலர் V.ஜீவாலா, பயிற்சி அலுவலர்கள் R.ரங்கராஜ், S.கிருஷ்ணன், MK.முருகேசன். உதவி பயிற்சி அலுவலர்கள் பழனிக்குமார், ரமேஷ், விஜயகுமார், மணிகண்டன் அலுவலக மேலாளர் B.மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி பிரார்த்தனையை செயலாளர் R.சங்கர் வாசித்தார் நிறைவாக நாட்டு நல பணித்திட்ட அலுவலர் P.ஜோதிமணி நன்றி கூறினார்.