• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பாக நீர், மோர் பந்தல்.. கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்

Byகாயத்ரி

Apr 1, 2022

விருதுநகர் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல்
திருவிழாவை முன்னிட்டு விருதுநகரில் விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பாக நீர், மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்.

விருதுநகர் அருள்மிகு மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) பொங்கல் திருவிழாவும் திங்கள்கிழமை கயிறுகுத்து நிகழ்ச்சியும், செவ்வாய்கிழமை தேரோட்டமும் நடைபெறுகின்றது. பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு விருதுநகரில் விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பாக நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டது. விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி நீர், மோர் பந்தலை திறந்து வைத்தார். பக்தர்களுக்கு இளநீர், தண்ணீர் பழம், மோர் மற்றும் பழங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் வழக்கறிஞர் விஜயகுமார், விருதுநகர் நகர செயலாளர் முகம்மதுநெய்னார், விருதுநகர் ஒன்றிய கழகச் செயலாளர்கள் கண்ணன், தர்மலிங்கம், மச்சராஜா, சிவகாசி மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் வெங்கடேஷ், விருதுநகர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் முத்துலட்சுமிதர்மலிங்கம், விருதுநகர் நகர்மன்ற உறுப்பினர்கள் டி.பி.எஸ்.வெங்கடேஷ், சரவணன், மிக்கேல் ராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள் மாதவன், சங்கர், முன்னாள் கவுன்சிலர் கணேஷ்குரு, விருதுநகர் நகர தகவல்தொழிலநுட்பத் துறை செயலாளர் பாசறை எஸ். சரவணன், திருத்தங்கல் முன்னாள் நகர கழக செயலாளர் சரவணக்குமார், திருத்தங்கல் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, பிஆர்சி ஆறுமுகம், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ராஜேஷ் குமார், தகவல் தொழில் நுட்ப பிரிவு மதுரை மண்டல இணை செயலாளர் கருப்பசாமிபாண்டியன்’, தகவல் தொழில்நுட்ப விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பாண்டியராஜன், மகளிரணி ராஜேஸ்வரி, தனலட்சுமி, அன்னபூரணம் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூரைக்குண்டு செவல்பட்டி மாரிக்கனி, தாதம்பட்டி செந்தில்குமார், மருளுத்து இரையா, சிவகாசி ஒன்றிய இளைஞராணி செயலாளர் கே.டி.சங்கர் சிவகாசி நகர இளைஞரணி செயலாளர் கார்த்திக், நகர எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ஆர். நாக சுப்பிரமணியன் உட்பட மாவட்ட கழக ஒன்றிய கழக நகரக் கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.