திருப்பரங்குன்றத்தில் இளைஞர் அணி சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சியில் மண்டல தலைவர் சுவிதா விமல் நீர், மோர் மற்றும் பழங்கள் வழங்கினார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம், ஏப்.22- திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் பகுதியில் தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் பொதுமக்களுக்கு நீர், மோர் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
கோடையில் பொதுமக்களை பாதிக்காத வகையில் ஆங்காங்கே நீர் மோர் பந்தல் அமைக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திமுகவினருக்கு உத்தரவிட்டனர். அதன் அடிப்படையில் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் அறிவுறுத்தலின் பேரில் திருப்பரங்குன்றத்தில் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விமல் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பகுதி செயலாளர் கிருஷ்ண பாண்டியன், வட்டச் செயலாளர் எம்.ஆர்.பி.ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் சுவிதா விமல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொது மக்களுக்கு நீர்மோர், ரோஸ் மில்க், இளநீர், தண்ணீர் பழங்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் இளைஞரணி துணை அமைப்பாளர் தென்ழஞ்சி சுரேஷ், நிர்வாகிகள் டிப்போ ரவி, நீதி மன்னன், கவிஞர் ஜீவா, செவன் ஸ்டார் செல்வி, ஆண்டி, இயேசு,கூடல் ராஜேஷ், முத்துமாரி, பூட்டோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.


