• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பழைய பென்ஷன் திட்டம் வேண்டும்.., ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தம்…

BySeenu

Nov 21, 2023
SRMU சேலம் கோட்டம் கோவை தலைமை கிளையில் பழைய பென்சன் திட்டத்தை திரும்பப் பெற வேண்டி பொது வேலை நிறுத்தத்திற்கான ரகசிய வாக்கு எடுப்பு நடைபெற்றது.

மத்திய அரசு புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யாவிட்டால், இந்தியா முழுவதும் SRMU சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.

ஏற்கனவே மத்திய அரசிடம் பல்வேறு பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட பிறகு பொது வேலை நிறுத்தத்திற்கான ரகசிய வாக்கெடுப்பு இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது.

கடந்த 2004-ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு புதிய பென்ஷன் திட்டத்தை இயற்றி தொழிலாளர் விரோத கொள்கையை எதிர்த்து அகில இந்திய அளவில் பல்வேறு போராட்டங்கள்,தர்ணாகள், ஆர்ப்பாட்டம் போன்றவற்றை நடைபெற்றது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் புதுடெல்லி ராம்லீலா மைதானத்தில் புதிய பென்ஷன் திட்டத்தை எதிர்த்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி நடைபெற்ற பேரணிக்கு பிறகு எந்த விதமான அறிவிப்பையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை.

அதனைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு போராட்டக் குழு எடுத்த முடிவின் அடிப்படையில் இந்தியா முழுவதும் நவம்பர் 21,22 மற்றும் 23 தேதிகளில் காலவரயற்ற வேலை நிறுத்தத்திற்கான வாக்கெடுப்பு தற்பொழுது நடைபெற்று வருகிறது.