தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கான பதினைந்தாவது ஊதிய ஒப்பந்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை சென்னை குரோம்பேட்டை போக்குவரத்து பயிற்சி மையத்தில் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்று வருகிறது.
சென்னை குரோம்பேட்டை அரசு போக்குவரத்து பயிற்சி மையத்தில் போக்குவரத்து சங்கங்களின் 15 வது ஊதிய உயர்வு முதற்கட்ட பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி குரோம்பேட்டை ஓட்டுநர் பயிற்சி மையத்தில் நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில் ஊதிய உயர்வு ,தற்காலிக பணியாளர்களை நியமிக்க கூடாது ,ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள படிகள் உள்ளிட்ட 54 கோரிக்கைகள் முன்வைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது இதில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொள்ளவில்லை.
இந்த நிலையில் 15வது ஊதி ஒப்பந்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் குரோம்பேட்டை ஓட்டுனர் பயிற்சி மைய்யம் வளாகத்தில் நடைபெற்று வருகிறது,இதில் போக்குவரத்து துறை செய்லர் பணிந்தர் ரெட்டி, போக்குவரத்து கழக 8 மண்டல இயக்குனர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் அண்ணா தொழிற் சங்கம் சார்பில் கமலக்கண்ணன் தோ.மு.ச. சார்பில் நடராஜன்,சிஐடியு சார்பில் ஆறுமுக நைனார்,ஐ.என். டி .யு. சார்பில் வில்சன் உட்பட 13 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தையில் ஊதிய உயர்வு ,தற்காலிக பணியாளர்களை நியமிக்க கூடாது ,ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள படிகள் உள்ளிட்ட 54 கோரிக்கைகள் முன்வைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்,
மேலும் நாளை நடைபெற உள்ள இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையில் 70 மேற்பட்ட தொழிற்சங்கங்கள் பங்கேற்க உள்ளதாக அதிகரிக்கள் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது,
இந்த்நிலையில் இன்று அமைச்சர் தலைமையில் நடைபெறும் 15 ஆவது ஊதிய ஒப்பந்த முதல் கட்ட பேச்சு வார்த்தையில் வவெளிப்படைத்தன்மை இல்லை எனக் கூறி அதிமுக தொழிற்சங்கத்தை சேர்ந்த கமலக்கண்ணன் மற்றும் தேமுதிக தொழிற்சங்க நிர்வாகிகள் கண்ணில் கருப்பு துணி கட்டியவாறு கூட்டத்தில் பங்கேற்றனர்.
வெளிப்படைத்தன்மை இல்லாமல் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் கண்கட்டி வித்தை காட்டுவதாக, தெரிவித்து அதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு துணியில் கண்களை கட்டி பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டதாக அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



